முதல்வருக்குத் தெரியாமல் அரசாணையா?தவெக அரசுக்கு பெ. சண்முகம் சரமாரிக் கேள்விமதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! தவெக வேட்பாளர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்களா?காலை உணவு திட்ட விரிவாக்கம்! திருவான்மியூரில் நாளை முதல்வர் விஜய் தொடக்கிவைக்கிறார்!பொது வாழ்வில் வந்துவிட்டால் சுய மரியாதையை இழக்க வேண்டுமா? ஸ்மிருதி இராணி கேள்விமகள் புத்தாக்க நிறுவனத்துக்கு நிதி கொடுக்காதது ஏன்? மெலின்டா கேட்ஸ் விளக்கம்தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு தில்லான் வெள்ளி வென்றார்ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலி! முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல: மரிய வில்சன்கேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!

ராஜாக்கூர் காளியம்மன் கோயில் ஆடித் திருவிழா: சூரி, விமல் ஒயிலாட்டத்தில் அசத்தல்!

ராஜாக்கூர் காளியம்மன் கோயில் ஆடித் திருவிழா பற்றி..

Rajakkur Kaliamman Temple

ஆடித் திருவிழா

Published On :

ராஜாக்கூர் காளியம்மன் கோயில் ஆடித் திருவிழா விமரிசையாக நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர்கள் சூரி, விமல் ஆகியோர் பங்கேற்றனர்.

மதுரை மாவட்டம் ராஜாக்கூர் கிராமத்தில் உள்ள அருள்மிகு காளியம்மன் கோயிலின் ஆடித் திருவிழா, ஆண்டுதோறும் பக்தி பரவசத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. பிரபல திரைப்பட நடிகர் சூரியின் சொந்த ஊரான ராஜாக்கூரில் நடைபெறும் இந்தத் திருவிழாவில், கிராம மக்கள் மட்டுமின்றி சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்களும் பங்கேற்பது வழக்கம்.

இந்த ஆண்டுக்கான ஆடித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி காப்புக் கட்டுதல், முளைப்பாரி எடுத்தல், கும்மிப் பாட்டு, ஒயிலாட்டம், அம்மன் வீதி உலா உள்ளிட்ட பல்வேறு பாரம்பரிய நிகழ்ச்சிகள் தினமும் நடைபெற்று வருகின்றன.

விழாவின் முக்கிய நிகழ்வான முளைப்பாரி எடுத்தல் நிகழ்ச்சி நேற்று இரவு நடைபெற்றது. இதில் நடிகர் சூரி மற்றும் நடிகர் விமல் கலந்துகொண்டு பக்தர்களுடன் இணைந்து விழாவில் பங்கேற்றனர். தொடர்ந்து ஒயிலாட்டக் கலைஞர்களுடன் இணைந்து இருவரும் உற்சாகமாக நடனமாடினர். இதைக் கண்ட பொதுமக்கள் மற்றும் ரசிகர்கள் ஆரவாரத்துடன் வரவேற்றனர்.

திருவிழாவில் நடிகர்கள் சூரி, விமல் ஆகியோரின் பங்கேற்பு கிராம மக்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியதுடன், இருவரும் பொதுமக்களுடன் கலந்துரையாடி விழாவைச் சிறப்பித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.