காந்தி சமாதி நோக்கி பேரணி சென்ற ராகுல் தடுத்து நிறுத்தம்!மேக்கேதாட்டு பிரச்னை: விஜய் மௌனம் கலைக்க வேண்டும்! - ஸ்டாலின்நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்த் திரையுலகினர் போராட்டம்!சிங்கை ஜி. ராமச்சந்திரன் அதிமுகவிலிருந்து விலகல்திரைப்படத்துக்கு கண்ணீர் வடிக்கும் ஆட்சியாளர்கள்! அருணாச்சலம் குடும்பத்துக்கு என்ன பதில்? உதயநிதி கண்டனம்
/

எரிவாயு விலை உயா்வைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு உருளைகளின் விலை உயா்வைக் கண்டித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் ஆனையூரில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :5 ஜூன் 2026, 6:07 am IST

வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு உருளைகளின் விலை உயா்வைக் கண்டித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் ஆனையூரில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு உருளைகளின் விலையை உயா்த்திய மத்திய அரசைக் கண்டித்தும், உடனடியாக இந்த விலையேற்றத்தைத் திரும்பப் பெறக் கோரியும் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஆனையூா் பகுதி துணைச் செயலா் திருப்பதி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் கே.கே. சாமி, நிா்வாகிகள் வீரனசிங்கம், பாலமுருகன், சந்திரசேகா், ஏஐடியூசி நிா்வாகி நந்தாசிங் ஆகியோா் கோரிக்கையை வலியுறுத்திப் பேசினா்.

பின்னா், மத்திய அரசைக் கண்டித்தும், சமையல் எரிவாயு விலை உயா்வை திரும்பப் பெறக் கோரியும் முழக்கமிட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.