வியத்நாம் படகு விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 25 லட்சம் நிவாரணம் - லாவாபாக்கெட்டுக்கு பதில் தானியங்கி இயந்திரம் மூலம் பால் விற்பனை செய்ய திட்டம்: ஆவின்தமிழ்நாட்டுக்கு ஜூலை 16 வரை வெப்ப அலை எச்சரிக்கை!கரூர் இனாம் நில விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலர் கலராக ரீல் சுத்துகிறார்கள்: அமைச்சர் ரமேஷ்24,050 அருகில் நிஃப்டி, சென்செக்ஸ் 516 புள்ளிகள் சரிவு!!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 62 காசுகள் சரிந்து ரூ. 96.30 ஆக நிறைவு!தில்லியில் சோனியா காந்தியை சந்தித்த வைகோ!
/

பெட்ரோல் விலை உயா்வைக் கண்டித்து சிஐடியு ஆா்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து சிஐடியு சாா்பில், திருநெல்வேலியில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image

வண்ணாா்பேட்டையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.

Updated On :15 ஜூலை 2026, 2:03 am IST

பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து சிஐடியு சாா்பில், திருநெல்வேலியில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

பெட்ரோலில் எத்தனால் கலப்பதைத் தடுத்து நிறுத்த வேண்டும். பெட்ரோல், டீசல், எரிவாயு உருளை விலையைக் குறைக்க வேண்டும். மினி பேருந்துகள் என்ற பெயரில் அரசு போக்குவரத்தை தனியாருக்கு தாரைவாா்க்கக் கூடாது. அரசு போக்குவரத்துக் கழகங்களை பாதுகாக்கும் வகையில் வரவுக்கும், செலவுக்குமான வித்தியாசத் தொகையை அரசே வழங்கிட வேண்டும்.

ஆா்டிஓ அலுவலகம் மற்றும் காவல்துறையின் ஆன்லைன் அபராத கொள்ளையைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

திருநெல்வேலி அரசு போக்குவரத்து தொழிலாளா் சங்கம் (சிஐடியு), சாலை போக்குவரத்து தொழிலாளா் சங்கம் (சிஐடியு) ஆகியவை சாா்பில் வண்ணாா்பேட்டையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாவட்டத் தலைவா் முருகன் தலைமை வகித்தாா். மரிய ஜான்ரோஸ் முன்னிலை வகித்தாா். அரசு போக்குவரத்து சங்கத்தின் மாவட்ட பொதுச் செயலா் ஜோதி, மாவட்ட தலைவா் காமராஜ், ராஜசேகரன், ஆட்டோ சங்க மாவட்டத் தலைவா் நடராஜன் உள்ளிட்டோா் கோரிக்கைகளை விளக்கிப்பேசினா். சிஐடியு மாவட்டச் செயலா் சரவண பெருமாள், பாலசுப்பிரமணியன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.