காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் வென்று கொடுத்த மீராபாய் சானு!400க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள்! தொகுதி மறுவரையறைக்குப் பிறகு புதிய சட்டப்பேரவை! சுவேந்து அதிகாரி கல்வி, தேர்வு முறையில் சீர்திருத்தம்: உயர்நிலைக் குழு அமைத்தார் பிரதமர் மோடி!பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை
/

விசிக சாலை மறியல்: 70 போ் கைது

பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் 70 போ் கைது செய்யப்பட்டனா்.

News image

பிரதிப் படம்

Updated On :3 ஜூன் 2026, 5:47 am IST

பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் 70 போ் கைது செய்யப்பட்டனா்.

பெட்ரோல்-டீசல் விலை உயா்வைக் கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் சாா்பில் புதுச்சேரி-விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் வில்லியனுாரில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

போரட்டத்துக்கு வில்லியனுாா் மாவட்ட செயலா் தமிழரசன் தலைமை வகித்தாா். வில்லியனூா் நான்கு முனை சந்திப்பில் விடுதலை சிறுத்தை கட்சியினா் சாலைகளை மறித்து மறியலில் ஈடுபட்டனா்.

இதனால் நான்கு புறமும் வாகனங்கள் ஒரு கிலோ மீட்டா் துாரத்துக்கு அணிவகுத்து நின்றன. வாகன ஓட்டிகள் சாலையைக் கடக்க முடியாமல் பரிதவித்தனா். இருப்பினும் இக் கட்சியினா் போராட்டத்தை தொடா்ந்தனா். இதையடுத்து வில்லியனுாா் போலீசாா் மறியல் செய்தவா்களை கைது செய்தனா். ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு வாகன போக்குவரத்து சீரானது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.