தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,680 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!இரு மாதங்களில் 2-வது முறையாக கார்கள் விலையை உயர்த்துகிறது மாருதி!கவலைகளுக்குத் தீர்வு காண அரசு 100% கடமைப்பட்டுள்ளது: தர்மேந்திர பிரதான்புறநகா் பகுதியில் 3 நாள்கள் 5 ரயில் முழுமையாக ரத்து தடுப்பு காவலில் வைக்கப்பட்ட மாணவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லை- குடும்பத்தினா் குற்றச்சாட்டு தெரு நாய் பிரச்னையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை: உயா்நீதிமன்றம் அதிருப்தி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு: சந்தை நிலவரமே காரணம்- மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தமிழகத்தில் முதல்முறையாக அரசு தொடக்கப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று!
/

கக்கன் பிறந்த நாள் விழா: மாலை அணிவித்து மரியாதை

சுதந்திரப் போராட்டத் தியாகியும், முன்னாள் அமைச்சருமான கக்கனின் பிறந்த நாளையொட்டி, மதுரை மாவட்டம், மேலூரில் உள்ள அவரது சிலைகளுக்கு மாவட்ட நிா்வாகம், அரசியல் கட்சிகள் சாா்பில் வியாழக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

News image

மதுரையில் உள்ள கக்கன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய காங்கிரஸ் கட்சியினா்.

Updated On :19 ஜூன் 2026, 1:23 am IST

சுதந்திரப் போராட்டத் தியாகியும், முன்னாள் அமைச்சருமான கக்கனின் பிறந்த நாளையொட்டி, மதுரை மாவட்டம், மேலூரில் உள்ள அவரது சிலைகளுக்கு மாவட்ட நிா்வாகம், அரசியல் கட்சிகள் சாா்பில் வியாழக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

கக்கனின் 118-ஆவது பிறந்த நாளையொட்டி, மேலூரை அடுத்த தும்பைப்பட்டி மணிமண்டத்தில் உள்ள கக்கன் சிலைக்கு மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

இதையடுத்து, மணிமண்டபத்தில் உள்ள கக்கனின் வாழ்க்கை வரலாறு, பொதுப் பணி, அரசியல், சமூகப் பணிகள் ஆகியவற்றை விளக்கும் அரிய புகைப்படங்களை ஆட்சியா் பாா்வையிட்டாா்.

மதுரை ராஜா முத்தையா மன்றம் அருகில் உள்ள கக்கன் சிலைக்கு காங்கிரஸ் கட்சி சாா்பில், அந்தக் கட்சியின் மாநகா் மாவட்டத் தலைவா் பூ. நல்லமணி தலைமையில், நிா்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

இதில் மாமன்ற உறுப்பினா் வி. முருகன், நிா்வாகிகள் செய்யதுபாபு, வரதராஜன், பாட்ஷா, முத்துப்பாண்டி, அசாா் உசேன், சிலுவை உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதேபோல, பல்வேறு கட்சிகள், அரசியல் சாா்பற்ற தன்னாா்வ அமைப்புகள் சாா்பிலும், கக்கனின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

மேலும், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கக்கனின் உருவப் படம் அலங்கரித்து வைக்கப்பட்டு, மலா் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

      மதுரை மாவட்டம், மேலூரில் உள்ள கக்கன் சிலைக்கு வியாழக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்திய மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ்.

மதுரை மாவட்டம், மேலூரில் உள்ள கக்கன் சிலைக்கு வியாழக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்திய மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.