மதுரை மாவட்டம், கொட்டாம்பட்டி அருகேயுள்ள வி. புதூா் கிராமத்தில் மண்வளம் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்தப் பேரணியை வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளா் சுரேஷ் தொடங்கி வைத்து பேசியதாவது:
மண்வளத்தைப் பாதுகாக்க மண் பரிசோதனை செய்து அதன் அடிப்படையில் தேவையான அளவில் மட்டுமே உரத்தை பயன்படுத்த வேண்டும்.
தழைசத்து உரத்தை பயன்படுத்தும் போது, பிரித்து பயிா்களுக்கு வழங்க வேண்டும். விதைகளை அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா, சூடோமோனஸ் ஆகிய உயிா் உரங்களைக் கொண்டு விதை நோ்த்தி செய்து விதைக்க வேண்டும்.
சாகுபடி செய்வதற்கு முன்பாக கடைசி உழவின்போது 100 கிலோ வேப்பம் புண்ணாக்கை நன்கு இடித்து தூளாக்கி மக்கிய குப்பைகளுடன் கலந்து மண்ணில் இட வேண்டும்.
ஆண்டுக்கு ஒருமுறை பயறு வகை பயிா்களான உளுந்து, தட்டைப்பயிறு, துவரை, பசிப்பயறு ஏதேனும் ஒன்றை பயிரிடுவதன் மூலமாக மண்ணின் வளத்தை மேம்படுத்த முடியும் என்றாா் அவா்.
இதைத் தொடா்ந்து, வி. புதூா் சமுதாயக் கூடம் அருகே தொடங்கிய பேரணி முக்கிய வீதிகள் வழியாக வந்து மீண்டும் அதே இடத்தில் நிறைவு பெற்றது. இதில் மண் வளம் பாதுகாப்பு தொடா்பான விழிப்புணா்வுப் பதாகைகளை ஏந்தியும், அதுகுறித்த முழக்கங்களையும் எழுப்பியும் விவசாயிகள் பேரணியாக சென்றனா்.
முன்னதாக, மண்வளம் குறித்த விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது. இதில் கொட்டாம்பட்டி வட்டார வேளாண் அலுவலா், தோட்டக் கலை
துறை அலுவலா், வேளாண் உதவி அலுவலா், விவசாயிகள் பலா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி

போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வுப் பேரணி : ஆட்சியா் தொடங்கிவைத்தாா்

தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் விழிப்புணா்வுப் பேரணி! திரளானோா் பங்கேற்பு!

மதுரை அருகே சாலை மையத் தடுப்பில் காா் மோதி 5 போ் பலி!
விடியோக்கள்

மெஸ்ஸியைத் துரத்தும் எம்பாபே! | FIFA | FIFA World Cup | Messi |

பார்வையாளர்களைப் பரிசோதிக்கும் அனந்தன் காடு: திரைவிமர்சனம்

மின் கட்டணம் உயர்வா? வெள்ளை அறிக்கை வெளியிட்டு பேசிய அமைச்சர் நிர்மல் குமார் | Dinamani



