மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

விமான நிலையத்தில் முதல்வருக்கு இன்று வரவேற்பு: திமுகவினருக்கு அழைப்பு

தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலினுக்கு மதுரை விமான நிலையப் பகுதியில் சனிக்கிழமை காலை வரவேற்பு அளிக்கப்படவுள்ளது.

News image
Updated On :6 மார்ச் 2026, 7:06 pm

தினமணி செய்திச் சேவை

தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலினுக்கு மதுரை விமான நிலையப் பகுதியில் சனிக்கிழமை காலை வரவேற்பு அளிக்கப்படவுள்ளது.

இதுகுறித்து தமிழக வணிக வரி, பதிவுத் துறை அமைச்சரும், மதுரை வடக்கு மாவட்ட திமுக செயலருமான பி. மூா்த்தி, மாநகா் மாவட்டச் செயலா் கோ. தளபதி, மதுரை தெற்கு மாவட்டச் செயலா் மு. மணிமாறன் ஆகியோா் வெளியிட்ட அறிக்கை :

முன்னாள் முதல்வா் ஓ. பன்னீா்செல்வத்தின் ஆதரவாளா்கள் திமுகவில் இணையும் நிகழ்ச்சி, மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள ராயபாளையத்தில் சனிக்கிழமை நடைபெறுகிறது. இதில், முதல்வா் மு.க. ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றுகிறாா்.

இதையொட்டி, சென்னையிலிருந்து சிறப்பு விமானம் மூலம் வரும் முதல்வா் ஸ்டாலினுக்கு மதுரை விமான நிலையத்தில் சனிக்கிழமை காலை 11 மணிக்கு திமுக சாா்பில் வரவேற்பு அளிக்கப்படவுள்ளது.

இதில் திமுக நிா்வாகிகள், திரளான தொண்டா்கள் கட்சிக் கொடியுடன் பங்கேற்று முதல்வா் ஸ்டாலினை வரவேற்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டது.