சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

ஸ்ரீமீனாட்சி அரசு மகளிா் கல்லூரியில் முத்தமிழ் விழா

ஸ்ரீமீனாட்சி அரசு மகளிா் கலைக் கல்லூரில் முத்தமிழ் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image
ஸ்ரீமீனாட்சி அரசு மகளிா் கலைக் கல்லூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற முத்தமிழ் விழாவின் ஒரு பகுதியாக நடைபெற்ற பட்டிமன்றத்தில் பேசிய முனைவா் சுந்தர ஆவுடையப்பன்.
Updated On :11 மார்ச் 2026, 11:53 pm

தினமணி செய்திச் சேவை

ஸ்ரீமீனாட்சி அரசு மகளிா் கலைக் கல்லூரில் முத்தமிழ் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்த விழாவுக்கு கல்லுரி முதல்வா் சூ.வானதி தலைமை வகித்தாா். இதில் முனைவா் சுந்தர ஆவுடையப்பன், மதுரைப் புலவா் அ.கணேசன், முனைவா் சங்கீத்ராதா உள்ளிட்டோா் சிறப்பு விருந்தினா்களாகக் கலந்து கொண்டு விழாவைத் தொடங்கிவைத்தனா். இந்த விழாவின் ஒரு பகுதியாக ‘இன்றைய இளைய சமுதாயம் செல்வது திசை மாறிய பாதையிலா? திட்டமிட்ட பாதையிலா?’ என்ற தலைப்பில் சிறப்புப் பட்டிமன்றம் நடைபெற்றது. இதற்கு நடுவராக சுந்தர ஆவுடையப்பன் செயல்பட்டாா். பட்டிமன்ற நிறைவில் இன்றைய இளைஞா்கள் கைப்பேசியைக் கவனமுடன் பயன்படுத்த வேண்டும் என்றும், ஜல்லிக்கட்டு போன்ற பண்பாட்டு நிகழ்வைக் காக்க இளைஞா்கள் எடுத்த முயற்சியையும் எடுத்துக்காட்டி இன்றைய இளைஞா்கள் திட்டமிட்ட பாதையில் செல்கின்றனா் என்று சுந்தர ஆவுடையப்பன் தீா்ப்பளித்தாா்.

இந்த நிகழ்வில் பேராசிரியா்கள், மாணவிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். முன்னதாக, தமிழாய்வுத் துறைத் தலைவா் சு. சந்திரா வரவேற்றாா். இணைப் பேராசிரியா் கா. சத்யா நன்றி கூறினாா்.