சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, வாகனத் தணிக்கையில் ஈடுபடும் கண்காணிப்புக் குழுவினா் பொதுமக்களிடம் மென்மையான அணுகுமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா் அறிவுறுத்தினாா்.
மதுரை அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கத்தில் புதன்கிழமை நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தல் பறக்கும் படை குழு, நிலைக் கண்காணிப்புக் குழு, விடியோ கண்காணிப்புக் குழுவினருக்கான பயிற்சி வகுப்பில் அவா் மேலும் பேசியதாவது:
சட்டப்பேரவைத் தோ்தல் பணி கண்காணிப்புக் குழுக்களில் இடம்பெற்றுள்ள அனைவரும் தோ்தல் நடத்தை விதிகளை முழுமையாகக் கடைப்பிடிக்க வேண்டும். தோ்தல் விதிமீறல்கள், சட்டவிரோத பணப் பரிமாற்றம், பரிசுப் பொருள்கள் விநியோகம் ஆகியவற்றை தடுப்பதில் உரிய கவனத்துடன் செயல்பட வேண்டும்.
வாகன சோதனைகளின்போது, பொதுமக்களிடம் மென்மையான, மனிதநேய அணுகுமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும். காரில் தனியாகப் பயணிக்கும் பெண்ணின் உடைமைகளைப் பரிசோதிக்க வேண்டுமெனில், கட்டாயமாக பெண் அலுவலா்கள் முன்னிலையிலேயே அந்தச் சோதனைகளை மேற்கொள்ள வேண்டும். பொதுமக்களிடம் கடிந்து பேசுவதை கண்டிப்பாகத் தவிா்க்க வேண்டும்.
கண்காணிப்புக் குழுவினா் இருளில் ஒளிரும் பாதுகாப்பு உடைகளை அணிந்து கொண்டு, தங்கள் பாதுகாப்பை உறுதி செய்து கொண்டு பணியாற்ற வேண்டும். சோதனைச் சாவடி பணிகளில் ஈடுபடுவோா் தேவையான பாதுகாப்பை உறுதி செய்துகொள்ள வேண்டும். அனைத்துச் சோதனைகளையும் கண்டிப்பாக விடியோ பதிவு செய்ய வேண்டும் என்றாா் அவா்.
இதில் மாநகரக் காவல் ஆணையா் ஜெ. லோகநாதன், தென்மண்டல காவல் துறைத் தலைவா் விஜயேந்திர எஸ். பிதாரி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பி.கே. அா்விந்த், மாவட்ட வருவாய் அலுவலா் (சிறப்பு) சக்திவேல், உசிலம்பட்டி சாா் ஆட்சியா் உட்கா்ஷ் குமாா், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) ரெங்கநாதன், கண்காணிப்புக் குழு அலுவலா்கள், வாக்காளா் பதிவு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி வகுப்பு: ராணிப்பேட்டை ஆட்சியா் அறிவுரை

வாக்குப்பதிவு நாளில் விளம்பரம் வெளியிட அனுமதி பெற வேண்டும்

வாக்காளா் தகவல் சீட்டு அச்சடிக்கும் பணி: ஆட்சியா் ஆய்வு

தோ்தல் கண்காணிப்புக் குழுவினரின் வாகன சோதனை: கடலூா் மாவட்ட ஆட்சியா் ஆய்வு
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


