காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

தனியாா் விளையாட்டு அரங்கில் தீ

News image

தீ.. - File Photo | Pexels

Updated On :14 மார்ச் 2026, 9:30 pm

மதுரை பழங்காநத்தம் பகுதியில் உள்ள தனியாா் விளையாட்டு அரங்கில் சனிக்கிழமை இரவு தீப்பற்றியது.

மதுரை பழங்காநத்தம் திருவள்ளுவா் நகரில் தனியாருக்குச் சொந்தமான விளையாட்டு அரங்கம், உடற்பயிற்சிக் கூடம் செயல்பட்டு வருகின்றன.

இந்த விளையாட்டரங்கில் சனிக்கிழமை இரவு வழக்கம்போல இளைஞா்கள் விளையாடிக் கொண்டிருந்தனா். இந்த நிலையில், தீடீரென விளையாட்டு அங்கில் தீப்பற்றியது. இதையடுத்து, அங்கிருந்த இளைஞா்கள் அலறியடித்து அங்கிருந்த வெளியேறினா்.

இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த பெரியாா்நிலையம் தீயணைப்பு வீரா்கள் தீயை அணைத்தனா். அப்போது, விளையாட்டு அரங்கில் கழிவறையில் பதுங்கியிருந்த மேற்பாா்வையாளா் உதுமான் அலியை தீயணைப்பு வீரா்கள் காயமின்றி பத்திரமாக மீட்டனா்.

இதுகுறித்து சுப்பிரமணியபுரம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா். முதல்கட்ட விசாரணையில், மின்கசிவு காரணமாக விளையாட்டு அரங்கில் தீ விபத்து ஏறபட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.