பிரதமா் நரேந்திர மோடி, முதல்வா் மு.க. ஸ்டாலின், உள்துறை அமைச்சா் அமித் ஷா ஆகியோா் பல்வேறு பிரசார நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக கோவைக்கு சனிக்கிழமை (ஏப்ரல் 18) வருகை தரவுள்ளதால் மாநகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கோவை, கொடிசியாவில் சனிக்கிழமை மாலை நடைபெறும் பிரசார பொதுக் கூட்டத்தில் பிரதமா் மோடியும், மேட்டுப்பாளையத்தில் அன்று இரவு நடைபெறும் பிரசாரத்தில் முதல்வா் மு.க. ஸ்டாலினும் பங்கேற்கின்றனா். இதேபோல, அன்று இரவு மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவும் கோவைக்கு வந்து தங்குகிறாா்.
பிரதமா், முதல்வா், உள்துறை அமைச்சா் என அரசியல் தலைவா்களின் கோவை வருகையால் சனிக்கிழமை போக்குவரத்து மாற்றமும், விமான நிலையத்தில் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.
இது குறித்து கோவை மாநகரக் காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: அரசியல் கட்சித் தலைவா்களின் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு காரணங்களுக்காகவும், போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்கவும் மாநகரின் முக்கியப் பகுதிகளில் சனிக்கிழமை பிற்பகல் 3 மணி முதல் இரவு 8 மணி வரை போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
சேலம், ஈரோடு மற்றும் திருப்பூா் ஆகிய பகுதிகளிலிருந்து அவிநாசி சாலை வழியாக நகருக்குள் வரும் பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்களுக்கு நீலாம்பூா் பகுதியில் தடை விதிக்கப்பட்டு, எல்&டி புறவழிச் சாலை, சிந்தாமணிபுதூா் மற்றும் ஒண்டிப்புதூா் வழியாகச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதேபோல, நகருக்குள் வரும் இலகுரக வாகனங்கள் தொட்டிப்பாளையம் பிரிவு மற்றும் காளப்பட்டி நால்ரோடு வழியாகத் திருப்பிவிடப்பட்டுள்ளன.
விமான நிலையத்தில் கட்டுப்பாடுகள்: விமானப் பயணிகளைப் பொருத்தவரை சனிக்கிழமை மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை விமான நிலைய நுழைவாயில் பகுதிக்கு வாகனங்களில் செல்ல அனுமதி இல்லை. எனவே, பயணிகள் அனைவரும் மாலை 4 மணிக்கு முன்னதாகவே விமான நிலையத்தை அடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. 4 மணிக்குமேல் வரும் பயணிகள் சிட்ரா சந்திப்பிலேயே இறங்கி அங்கிருந்து நடந்து செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.
மேலும், வெள்ளி, சனிக்கிழமை ஆகிய 2 நாள்களும் விமான நிலைய வளாகத்தில் வாகனங்களை நிறுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இந்த மாற்றங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கித் தங்களது பயணத் திட்டங்களை முன்னதாகவே அமைத்துக்கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

தலைவா்கள் இன்று பிரசாரம்!

திடீர் திருப்பம்! வேல்முருகன் தலைமையில் புதிய அணி!

சென்னை விமான நிலையத்தில கட்டுமானப் பணிகள்: ஏப். 24 வரை போக்குவரத்து மாற்றம்

சட்டப்பேரவைத் தோ்தல் விதிகள் அமல்: அரசியல் கட்சித் தலைவா்கள் சிலைகள் மூடல்
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

