திருப்பரங்குன்றம் அருகே இரு வேறு இடங்களில் இரு இளைஞர்கள் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர்.
மதுரை திருப்பரங்குன்றத்தை அடுத்த சம்பக்குளம் விலக்கு அருகே கப்பலூர் - மதுரை சுற்றுச்சாலையின் நடுவே இறந்த நிலையில் இளைஞரின் உடல் இருந்தது. இது குறித்து அந்த வழியாகச் சென்றவர்கள் போலீஸாருக்கு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தகவல் அளித்தனர். இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த ஆஸ்டின்பட்டி போலீஸார், இறந்து கிடந்த நபரின் உடலைக் கைப்பற்றி சோதனையிட்டனர். முதலில் விபத்தாக இருக்கலாம் என போலீஸார் கருதிய நிலையில், இளைஞரின் உடலில் பல இடங்களில் வெட்டுக் காயங்கள் இருந்ததால், உடலை மீட்டு, கூறாய்வுக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து போலீஸôர் விசாரணை மேற்கொண்டனர்.
முதல் கட்ட விசாரணையில், இறந்தவர் வாடிப்பட்டி அருகேயுள்ள அய்யங்கோட்டை பகுதியைச் சேர்ந்த குமார் மகன் மதன் (28) என்பது தெரிய வந்தது.
இதேபோல, நிலையூர் - சம்பக்குளம் சாலையில் வண்ணபாறை அருகே ஒருவர் இறந்து கிடப்பதாக போலீஸôருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்கு திருமங்கலம் ஏ.எஸ்.பி. அன்சுல் நாகர் தலைமையிலான போலீஸார் சென்று பார்த்தபோது, 30 வயது மதிக்கத்தக்க இளைஞர் உடலில் பல இடங்களில் வெட்டப்பட்ட நிலையிலும், அடையாளம் காண முடியாத வகையில் இறந்தவரின் முகம் சிதைந்த நிலையில் இருந்தது தெரிய வந்தது. மேலும், இறந்தவர்கள் குறித்து போலீஸôர் அந்தப் பகுதி மக்களிடம் விசாரணை செய்தபோது, யாருக்கும் அடையாளம் தெரியவில்லை.
இதையடுத்து, மோப்ப நாய், தடய அறிவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு போலீஸார் விசாரணை நடத்தினர். தொடர்ந்து இறந்தவரின் உடலை மீட்டு, மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இதுகுறித்து ஊரகக் காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் உத்தரவின் பேரில், ஆஸ்டின்பட்டி போலீஸார் வழக்குப் பதிந்து, தனிப் படை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இளைஞா் வெட்டிக் கொலை

களக்காடு அருகே இளைஞா் வெட்டிக் கொலை

கடலூர் அருகே ரௌடி கொலை: போலீஸார் விசாரணை

மாற்றுத்திறனாளி வெட்டிக் கொலை
வீடியோக்கள்

சிங் கீதம் டீசர்!
தினமணி செய்திச் சேவை

அம்மா அம்மாதான் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தோழர்களை நெறிப்படுத்த மட்டுமே அந்த விடியோ! Thiruma விளக்கம்! | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே இதையெல்லாம் செய்யக் கூடாது? | CSK vs MI | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

