கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

மதுரையில் பரவலாக மழை

மதுரை, அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை இரவு மழை பெய்தது.

Updated On :6 மே 2026, 3:20 am IST

மதுரை, அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை இரவு மழை பெய்தது.

மதுரை மாவட்டத்தில் கடந்த ஒரு மாத காலமாக கடுமையான வெயில் வானிலை நீடித்து வந்தது. இந்த நிலையில், கடந்த வெள்ளி, சனி ஆகிய இரு நாள்களும் இரவு நேரத்தில் பரவலாக மழை பெய்தது. அதன் பிறகு, வெயில் வானிலையே நிலவியது.

இந்த நிலையில், தெற்கு மத்திய பிரதேசத்தின் மையப் பகுதிகள் முதல் மன்னாா் வளைகுடா வரை தமிழகம் வழியாக ஒரு வளிமண்டல தாழ்வுப் பாதை நிலவுவதால் மதுரை உள்ளிட்ட சில மாவட்டங்களில் இடி, மின்னலுடன் செவ்வாய்க்கிழமை இரவு மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.

இதன்படி, மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் செவ்வாய்க்கிழமை இரவு 10 மணிக்கு பிறகு பலத்த இடி, மின்னலுடன் மழை பெய்தது. திருப்பரங்குன்றம், திருநகா், தோப்பூா், கப்பலூா் உள்ளிட்ட பகுதிகளில் இரவு 10 மணி முதல் சுமாா் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக மழை பெய்தது. மதுரை தல்லாகுளம், கோ. புதூா், அண்ணாநகா், வண்டியூா், பழங்காநத்தம், மாட்டுத்தாவணி உள்ளிட்ட பகுதிகளில் இரவு 10.30 மணிக்கு பிறகும் பலத்த காற்று, இடி, மின்னலுடன் மழை பெய்யத் தொடங்கியது. இந்த மழை இரவு 11.30 மணிக்கு மேலாகவும் நீடித்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.