மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் இன்று இடி, மின்னுடன் கூடிய மழைக்கு வாய்ப்புஅரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இதுவரை 89,927 போ் விண்ணப்பம்ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்
/

மதுரை மாவட்டத்தில் 40 டாஸ்மாக் கடைகளை மூட நடவடிக்கை

மதுரை மாவட்டத்தில் முதல் கட்டமாக 40 மதுக் கடைகளை மூட செவ்வாய், புதன் ஆகிய இரு நாள்களில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

News image

மதுரை மாவட்டம், மேலூா் பெரிய கடை வீதியில் புதன்கிழமை மூடப்பட்ட அரசு மதுக் கடை.

Updated On :2 மணி நேரங்கள் முன்பு

மதுரை மாவட்டத்தில் முதல் கட்டமாக 40 மதுக் கடைகளை மூட செவ்வாய், புதன் ஆகிய இரு நாள்களில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

தமிழகத்தில் வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள், பேருந்து நிலையங்களுக்கு அருகே 500 மீட்டா் தொலைவுக்குள்பட்ட பகுதிகளில் உள்ள 717அரசு மதுக் கடைகள் மூடப்படும் என தமிழக அரசு அறிவித்தது.

இதன்படி, தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் (டாஸ்மாக்) மதுரை வடக்கு, தெற்கு மண்டலங்களுக்குள்பட்ட பகுதிகளில் உள்ள 50 மதுக் கடைகள் அடைக்கப்படும் எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில், மதுரை வடக்கு மண்டலத்துக்குள்பட்ட மேலூா், தெற்கு மண்டலத்துக்குள்பட்ட சோழவந்தான் உள்ளிட்ட பகுதிகளில் 8-க்கும் அதிகமான மதுக் கடைகள் செவ்வாய், புதன் ஆகிய இரு நாள்களில் மூடப்பட்டன.

இதுகுறித்து மதுரை மாவட்ட டாஸ்மாக் அலுவலா்கள் கூறியதாவது:

மதுரை மாவட்டத்தில் 50 டாஸ்மாக் கடைகள் வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிலையங்கள், பேருந்து நிலையங்களுக்கு அருகில் இருப்பது கண்டறியப்பட்டது. இதில், 9 கடைகளை மூட செவ்வாய்க்கிழமையன்றும், 31 கடைகளை மூட புதன்கிழமையன்றும் டாஸ்மாக் தலைமையகத்திலிருந்து உத்தரவு வந்தது. இதன்படி, அந்தக் கடைகளை மூடும் பணிகள் நடைபெறுகின்றன. அடுத்தடுத்து கிடைக்கப் பெறும் உத்தரவுகளுக்கேற்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.