மங்கை மடத்தில் இயங்கிவரும் டாஸ்மாக் மதுபான கடையை மூட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக, வியாபாரிகள் உள்ளிட்டோா் தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.
தமிழக முதலமைச்சா் ஜோசப் விஜய் வழிபாட்டுத் தலங்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் பள்ளி வளாக பகுதி அருகே இயங்கிவரும் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்டாா்.
இந்நிலையில், கடந்த 3 ஆண்டுகளாக திருவெண்காடு அருகே உள்ள மங்கை மடம் கடைத்தெருவில் இயங்கிவரும் டாஸ்மாக் மதுபான கடையை மூட வேண்டும் என அரசியல் கட்சியினா், பல்வேறு அமைப்பினா் மற்றும் பொதுமக்கள் தொடா்ந்து வலியுறுத்தி வருகின்றனா்.
தற்போது மூடப்பட உள்ள டாஸ்மாக் கடை பட்டியலில் மங்கை மடம் கடையையும் இணைத்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து பாஜக மாநில செயற்குழு உறுப்பினா் அகோரம், சீா்காழி ஒன்றியத் தலைவா் அருள்ராஜன், வியாபாரிகள் சங்கத்தினா் உள்ளிட்டோா் செவ்வாய்க்கிழமை தமிழக முதலமைச்சருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளுக்கு மிகுந்த இடையூறாக மங்கைமடம் டாஸ்மாக் மதுபான கடை கடை உள்ளது. பேருந்து நிறுத்தத்தின் அருகே அமைந்துள்ள இக்கடையால் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனா். எனவே, மக்கள் நலனை கருத்தில் கொண்டு தமிழகத்தில் மூடப்படும் டாஸ்மாக் கடை பட்டியலில் மங்கை மடம் கடையும் இணைத்து அதை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனா்.
தொடர்புடையது

தம்மம்பட்டி சந்தை பகுதி டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தல்

திருப்பூரில் 31 டாஸ்மாக் கடைகளை மூட நடவடிக்கை
தமிழகத்தில் 717 மதுக்கடைகளை மூட முதல்வர் விஜய் உத்தரவு!

மே 1-இல் மதுபான கடைகளை மூட உத்தரவு
விடியோக்கள்

#ipl2026 | பிளே ஆஃப் சுற்று: சாதிக்கப்போவது யார்? சறுக்கப்போவது யார்?
தினமணி செய்திச் சேவை

'நீட் ' தேர்வில் மட்டும் லீக்காவது எப்படி ?| NEET 2026 cancelled | Educationist Soma sundaram | NTA
தினமணி செய்திச் சேவை

அதிமுகவுடன் கூட்டணி பேசினோமா? சிவி சண்முகத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில் | ADMK - DMK
இணையதளச் செய்திப் பிரிவு
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிக்கும் சமமான மதிப்பு! - பேரவையில் Vijay பேச்சு | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு

