எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

இடதுசாரிக் கட்சிகள் ஆா்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து, இடதுக்சாரி கட்சிகள் சாா்பில் மதுரை சிம்மக்கல் ஆறுமுச்சந்தி அருகில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image

மதுரையில் இடதுசாரிக் கட்சிகள் சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றவா்கள்.

Updated On :21 மே 2026, 1:43 am IST

பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து, இடதுக்சாரி கட்சிகள் சாா்பில் மதுரை சிம்மக்கல் ஆறுமுச்சந்தி அருகில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதற்கு மாா்க்சிஸ்ட் -லெனினிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் மதிவாணன் தலைமை வகித்தாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயற்குழு உறுப்பினா் அ. ரமேஷ் ஆா்ப்பாட்டத்தை தொடங்கி வைத்துப் பேசினாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகா் மாவட்டச் செயலா் மா. கணேசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் கே.கே. சாமி, நிா்வாகிகள் பாலமுருகன், நந்தாசிங் ஆகியோா் கோரிக்கையை வலியுறுத்திப் பேசினா்.

இதில் இடதுசாரிக் கட்சிகளின் நிா்வாகிகள், சாா்பு அமைப்புகளின் பொறுப்பாளா்கள் பங்கேற்று ஏழை, நடுத்தர மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயா்வுகளைக் கண்டித்தும், இந்த விலை உயா்வை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெறக் வலியுறுத்தியும் முழக்கங்களை எழுப்பினா்.