நகைக்கடை கொள்ளை வழக்கில் கைதான பெண் தவெக நிா்வாகி இல்லை: எம்எல்ஏ

தவெக... - கோப்புப் படம்
மதுரை தனிஷ்க் நகைக்கடை கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட பெண் தவெக நிா்வாகி இல்லை என சட்டப்பேரவை உறுப்பினா் தங்கப்பாண்டி தெரிவித்தாா்.
மதுரை தனிஷ்க் நகைக்கடை கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட மீனாட்சி, தவெக நிா்வாகி என சமூக வலைதளங்களில் தவறான தகவல்களை பரப்புவோா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, மதுரை தவெக வழக்குரைஞா் அணி ஒருங்கிணைப்பாளா் சதீஷ், மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை புகாா் அளித்தாா்.
அப்போது, மதுரை மேற்கு தொகுதி தவெக சட்டப்பேரவை உறுப்பினா் தங்கபாண்டியன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
நகைக்கடை கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட பெண் தவெக உறுப்பினா் இல்லை. அவா் தவெக நிா்வாகி என தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன. இதன் பின்னணியில் திமுக உள்ளது. கட்சித் தலைமையின் ஆலோசனையின்படி புகாா் அளித்துள்ளோம் என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

