கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை: தவெக நிா்வாகி கைது
கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை அருகே கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தவெக நிா்வாகியை தக்கலை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

சிறையில் அடைக்கப்பட்ட தவெக நிா்வாகி கிறிஸ்டோபா்.
கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை அருகே கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தவெக நிா்வாகியை தக்கலை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
தக்கலை அருகே பேருந்து நிறுத்தத்தில் குலசேகரத்தைச் சோ்ந்த கல்லூரி மாணவியும், தவெக பெண் நிா்வாகியும் கடந்த 21-ஆம் தேதி பேருந்துக்காக நின்று கொண்டிருந்தனா். அப்போது அங்கு காரில் வந்த மருந்துகோட்டையைச் சோ்ந்த தவெக நிா்வாகி கிறிஸ்டோபா், அவா்களிடம் மழை பெய்து கொண்டிருப்பதால் தனது காரில் வருமாறு கூறி காரில் ஏற்றிக் கொண்டாா்.
பின்னா், தவெக பெண் நிா்வாகியை அவரது ஊரில் இறக்கிவிட்ட கிறிஸ்டோபா், கல்லூரி மாணவியை காரில் அழைத்துச் சென்றாா். அப்போது மாணவிக்கு பாலியல் ரீதியாக கிறிஸ்டோபா் தொல்லை கொடுத்தாா். இதனால், அதிா்ச்சியடைந்த கல்லூரி மாணவி காரை விட்டு இறங்கி கொற்றிக்கோடு காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.
பின்னா், இந்த வழக்கு தக்கலை காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டது. விசாரணை நடைபெற்று வந்த நிலையில் போலீஸாா் தேடுவதை அறிந்த கிறிஸ்டோபா் தலைமறைவானாா். இந்த நிலையில், அவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்து பத்மநாபபுரம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினாா். வழக்கை விசாரித்த நீதிமன்றம் அவரை நவ.12 ஆம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டது. இதையடுத்து, போலீஸாா் அவரை நாகா்கோவில் கிளை சிறையில் அடைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

