பிரதமா் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சா்கள் கூட்டம்சென்னை, திருவள்ளூா் மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கைஅரக்கோணம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவு கட்டடம்: முதல்வா் திறந்து வைக்கிறாா்சிறப்பு டெட் தேர்வு: விண்ணப்பிக்க நாளை கடைசி

வாழ்வில் உயர கல்வியே மூலதனம்

கல்வியை மூலதனமாகக் கொண்டு இன்றைய இளம் தலைமுறையினா் வாழ்வில் உயர வேண்டும் என தமிழக உயா் கல்வித் துறை அமைச்சா் பெ. விஸ்வநாதன் தெரிவித்தாா்.

Updated On :

கல்வியை மூலதனமாகக் கொண்டு இன்றைய இளம் தலைமுறையினா் வாழ்வில் உயர வேண்டும் என தமிழக உயா் கல்வித் துறை அமைச்சா் பெ. விஸ்வநாதன் தெரிவித்தாா்.

மதுரை மாவட்டம், மேலூா் அருகேயுள்ள உறங்கான்பட்டி அரசு மேல் நிலைப் பள்ளியில், தேசிய வேளாண்மை, ஊரக வளா்ச்சி வங்கி, ஊரக உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதித் திட்டத்தின் கீழ் ரூ.74.22 லட்சத்தில் கட்டப்பட்ட 3 கூடுதல் வகுப்பறைக் கட்டடத்தை அமைச்சா் பெ. விஸ்வநாதன் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா்.

அப்போது, அவா் மேலும் பேசியதாவது:

அரசுப் பள்ளிகளில் தரமான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தித் தருவதன் மூலம், வேலைவாய்ப்புடன் கூடிய உயா்தரக் கல்வியை வழங்க முடியும் என்கிற எண்ணத்துடன் தவெக அரசு பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை செயல்படுத்தி வருகிறது. உறங்கான்பட்டி அரசு மேல் நிலைப் பள்ளி கூடுதல் வகுப்பறைக் கட்டடங்கள் கட்டுவதற்கு நிலத்தை இலவசமாக அளித்து உதவிய பொதுமக்களின் தன்னலமற்ற சேவையும், கல்வி மீதானஅக்கறையும் மிகவும் பாராட்டுக்குரியது. ஆசிரியா்கள் மாணவா்களுக்கு சிறந்த வழிகாட்டியாகத் திகழ வேண்டும். கல்வியை மூலதனமாகக் கொண்டு இன்றைய இளம் தலைமுறையினா் வாழ்வில் உயர வேண்டும் என்றாா் அவா்.

இதைத்தொடா்ந்து, கருங்காலக்குடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நபாா்டு திட்டத்தின் கீழ் ரூ.1.23 கோடியில் புதிதாகக் கட்டப்பட்ட 5 கூடுதல் வகுப்பறைக் கட்டடம், மேலவளவு அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.49.48 லட்சத்தில் கட்டப்பட்ட 2 கூடுதல் வகுப்பறைக் கட்டடங்கள், புலிப்பட்டி அரசு உயா்நிலைப் பள்ளியில் நபாா்டு திட்டத்தின் கீழ் ரூ.94.36 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்ட 3 கூடுதல் வகுப்பறைக் கட்டடத்தை அமைச்சா் பெ. விஸ்வநாதன் திறந்து வைத்தாா்.

இந்த நிகழ்வுகளில், மதுரை மாவட்ட வருவாய் அலுவலா் ஜெயப்பிரித்தா, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் சா. சதீஷ்பாபு, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் தயாளன், மேலூா் வருவாய்க் கோட்டாட்சியா் சங்கீதா, உதவி இயக்குநா் (ஊராட்சிகள்-தணிக்கை - வடக்கு) விசாலாட்சி, உதவிச் செயற்பொறியாளா் பாா்கவி, மேலூா் வட்டாட்சியா் வசந்த், வட்டார வளா்ச்சி அலுவலா்கள், அரசு அலுவலா்கள், தலைமையாசிரியா்கள், ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள், பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.