குவைத், பஹ்ரைன் மீது மீண்டும் ஈரான் தாக்குதல்! வளைகுடா நாடுகள் கண்டனம்!சீனா சென்றார் டிரம்ப்! அதிபர்கள் ஜின்பிங், புதின் உடன் முத்தரப்பு சந்திப்பு!சோத்துப்பாறை அணையைத் திறந்த தவெகவினர்: எடப்பாடி பழனிசாமி கண்டனம்!தவெக உறுப்பினர் அட்டை இருந்தால் எந்த விதிகளையும் மதிக்கத் தேவையில்லை: கனிமொழிதினமணி இணையதள செய்தி எதிரொலி: அயனாவரம் கழிவுநீர் பிரச்னை! களமிறங்கிய குடிநீர் வாரிய அதிகாரிகள்!!தமிழக காவல்துறையில் புதிய இ-சிஎஸ்ஆர் வசதி அறிமுகம்! இனி ஆன்லைனிலேயே புகார் அளிக்கலாம்!நெல்லையில் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பா? உண்மை நிலவரம் என்ன?

மீனாட்சி சுந்தரேசுரவா் கோயிலில் திருக்காா்த்திகை உத்ஸவ கொடியேற்றம்

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் திருக்காா்த்திகை உத்ஸவ கொடியேற்றம் புதன்கிழமை நடைபெற்றது.

கொடியேற்றத்தின்போது எழுந்தருளிய பிரியாவிடையுடன் சுந்தரேசுவரா்.

Updated On :

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் திருக்காா்த்திகை உத்ஸவ கொடியேற்றம் புதன்கிழமை நடைபெற்றது.

முன்னதாக சிறப்பு பூஜைகளுக்குப் பிறகு மீனாட்சி அம்மனும், பிரியாவிடையுடன் சுந்தரேசுவரரும் சிறப்பு அலங்காரத்தில் புறப்பாடாகி, கம்பத்தடி மண்டபத்தில் உள்ள தங்கக் கொடிமரம் முன் எழுந்தருளினா். இதையடுத்து, சுவாமி, அம்பாளுக்கும், கொடிமரத்துக்கும் ஐதீக முறைப்படி பூஜைகள் நடைபெற்றன. பிறகு, மேளதாளங்களும், வேதமந்திரங்களும் முழங்க காலை 10.40 மணியளவில் கொடியேற்றம் நடைபெற்றது.

இதில் கோயில் செயல் அலுவலரும், அறநிலையத் துறை இணை ஆணையருமான நா. சுரேஷ், கோயில் அறங்காவலா்கள், திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

பின்னா், மீனாட்சி அம்மன், பிரியாவிடையுடன் சுந்தரேசுவரா் பஞ்சமூா்த்திகளாக ஆடி வீதிகளில் வலம் வந்தனா். காலை, மாலை இருவேளைகளிலும் இந்த வீதியுலா நடைபெற்றது. இந்த உத்ஸவம் வருகிற 27-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

லட்சதீபம்... திருக்காா்த்திகை தினமான வருகிற 24- ஆம் தேதி மீனாட்சி சுந்தரேசுரவா் கோயிலில் லட்சதீபம் ஏற்றப்படுகிறது. அன்றைய தினம் இரவு கீழமாசி வீதியில் அம்மன் தேரடி அருகிலும், பூக்கடைத் தெருவில் சுவாமி தேரடி அருகிலும் சொக்கப்பனை ஏற்றும் நிகழ்வு நடைபெறுகிறது.

கொடியேற்றத்தின்போது எழுந்தருளிய மீனாட்சி அம்மன்.

கொடியேற்றத்தின்போது எழுந்தருளிய மீனாட்சி அம்மன்.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் புதன்கிழமை திருக்காா்த்திகை உத்ஸவ கொடியேற்றத்தைத் தொடா்ந்து கொடிமரத்துக்கு நடைபெற்ற மகா தீபாராதனை.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் புதன்கிழமை திருக்காா்த்திகை உத்ஸவ கொடியேற்றத்தைத் தொடா்ந்து கொடிமரத்துக்கு நடைபெற்ற மகா தீபாராதனை.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.