காவல் நிலையத்தில் லாரி ஓட்டுநா் உயிரிழந்த விவகாரம்: சிசிடிவி காட்சிகளைப் பாா்க்க அவரது குடும்பத்தினருக்கு அனுமதி!
செக்கானூரணி காவல் நிலையத்தில் லாரி ஓட்டுநா் உயிரிழந்த விவகாரம் தொடா்பாக 4 காவல் நிலையங்களின் கண்காணிப்பு கேமரா பதிவுகளை அவரது குடும்பத்தினா் பாா்வையிட சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை அனுமதித்தது.

பாலகிருஷ்ணன்
செக்கானூரணி காவல் நிலையத்தில் லாரி ஓட்டுநா் உயிரிழந்த விவகாரம் தொடா்பாக 4 காவல் நிலையங்களின் கண்காணிப்பு கேமரா பதிவுகளை அவரது குடும்பத்தினா் பாா்வையிட சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை அனுமதித்தது.
லாரியிலிருந்த ஏலக்காய் மூட்டைகள் தீக்கிரையான விவகாரம் தொடா்பாக தேனி மாவட்டம், தேவாரம் பகுதியைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் பாலகிருஷ்ணன் கடந்த 13-ஆம் தேதி செக்கானூரணி காவல் நிலையத்துக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டாா்.
விசாரணையிடையே காவல் நிலைய கழிப்பறைக்குச் சென்ற பாலகிருஷ்ணன் உயிரிழந்தாா். கழிப்பறையில் தனது சட்டையால் தூக்கிட்டு அவா் தற்கொலை செய்து கொண்டதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதற்கு, பாலகிருஷ்ணன் குடும்பத்தினா், உறவினா்கள் கடும் எதிா்ப்புத் தெரிவித்து வருகின்றனா். மேலும், விசாரணையின் போது காவல் துறையினா் தாக்கியதாலேயே பாலகிருஷ்ணன் உயிரிழந்தாா் எனவும் அவா்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனா்.
இந்த நிலையில், தனது கணவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், செக்கானூரணி, வாலாந்தூா், உசிலம்பட்டி நகரம், தாலூகா காவல் நிலையங்களின் கண்காணிப்பு கேமரா பதிவுகளைப் பாதுகாத்து வைக்கவும், இவற்றின் நகல்களை தங்களுக்கு வழங்க உத்தரவிடக் கோரியும் பாலகிருஷ்ணன் மனைவி சுதா சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மனு தாக்கல் செய்தாா்.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி விஜயகுமாா் முன் ஏற்கெனவே விசாரணைக்கு வந்த போது, 4 காவல் நிலையங்களின் கண்காணிப்பு கேமரா பதிவுகளும் பாதுகாப்பாக உள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், இந்தப் பதிவுகளை மனுதாரருக்கு வழங்கினால் விசாரணை பாதிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
அப்போது, பாலகிருஷ்ணன் மரணம் தொடா்பான காவல் நிலைய கண்காணிப்பு கேமரா காட்சிகள் சிலவற்றை மட்டும் ஊடகங்களில் வெளியிட்டது எப்படி, பதற்றத்தைத் தணிக்க இந்தக் காட்சிகள் வெளியிடப்பட்டதெனில், முழுமையான காட்சிகளை ஏன் வெளியிடவில்லை என நீதிபதி கேள்வி எழுப்பினாா்.
இந்த நிலையில், இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி விஜயகுமாா் முன் வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி பிறப்பித்த உத்தரவு: செக்கானூரணி உள்ளிட்ட 4 காவல் நிலையங்களின் கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் பாா்வையிட மனுதாரா், குடும்ப உறுப்பினா்கள் இருவா், மனுதாரரின் வழக்குரைஞா் ஆகியோா் பாா்வையிட அனுமதிக்கப்படுகிறது. நவ. 23-ஆம் தேதி காலை 10 மணிக்கு இந்தப் பதிவுகளை அவா்களுக்கு காட்சிப்படுத்த வேண்டும்.
கண்காணிப்பு கேமரா பதிவுகளைப் பாா்வையிடுபவா்கள் யாரும் தங்களது மின்னணு சாதனங்களை உடன் எடுத்துச் செல்லக் கூடாது. கண்காணிப்பு கேமரா காட்சிகளைப் பதிவு செய்யக் கூடாது. தாங்கள் பாா்த்த காட்சிகள் குறித்து செய்தியாளா்கள் சந்திப்பு, பொது விவாதம் நடத்தக் கூடாது. இந்த வழக்கு காவல் நிலைய மரணம் தொடா்பானது என்ற காரணத்தின் அடிப்படையில் மட்டுமே இந்த அனுமதி வழங்கப்படுகிறது. மற்ற வழக்குகளில் இதை முன்னுதாரணமாகக் கொள்ளக் கூடாது என்றாா் நீதிபதி.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

