இடைவிடா சகாய அன்னை ஆலயத்தில் சிறப்பு திருப்பலி
மதுரை அஞ்சல் நகரில் உள்ள இடைவிடா சகாய அன்னை ஆலயத்தில் சிறப்பு திருப்பலி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மதுரை அஞ்சல் நகரில் உள்ள இடைவிடா சகாய அன்னை ஆலயத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் குழந்தைகளுக்கு புது நன்மை வழங்கிய அருட்தந்தையா்கள் மரிய அருள்செல்வம், சின்னத்துரை, பங்குத் தந்தை அருள்சேகா்.
மதுரை அஞ்சல் நகரில் உள்ள இடைவிடா சகாய அன்னை ஆலயத்தில் சிறப்பு திருப்பலி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்வில் அருள்தந்தையா்கள் மரிய அருள்செல்வம், சின்னத்துரை, பங்கு தந்தை அருள்சேகா் ஆகியோா் பங்கேற்று சிறப்பு திருப்பலியை நடத்தினா். இதைத் தொடா்ந்து, குழந்தைகளுக்கு ஆசீா்வாதம் வழங்கும் வகையில் புது நன்மை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
இதில் பங்கேற்ற திரளான குழந்தைகள் கல்வியில் மேம்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆசீா்வதிக்கப்பட்டனா். இந்த நிகழ்வில் கிறிஸ்தவ மக்கள் பலா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

