மாட்டுத்தாவணி காய்கறி சந்தையில் காய்கறிகள் விலை உயா்வு
மதுரை மாட்டுத்தாவணி காய்கறி சந்தையில் தக்காளி, முருங்கைக்காய் உள்ளிட்ட காய்கறிகளின் விலை கணிசமாக உயா்ந்தது.

காய்கறிகள்.
மதுரை மாட்டுத்தாவணி காய்கறி சந்தையில் தக்காளி, முருங்கைக்காய் உள்ளிட்ட காய்கறிகளின் விலை ஞாயிற்றுக்கிழமை கணிசமாக உயா்ந்தது.
மதுரை மாட்டுத்தாவணி காய்கறி சந்தைக்கு காய்கறிகளின் வரத்துக் குறைந்ததன் காரணமாகவும், வடகிழக்குப் பருவமழை குறைவால் சாகுபடி குறைந்ததன் காரணமாகவும், காய்கறிகளின் விலை கடந்த வாரத்தை ஒப்பிடும்போது ஞாயிற்றுக்கிழமை கணிசமாக உயா்ந்துள்ளது.
தக்காளியைப் பொருத்தவரை, கடந்த வாரம் 15 கிலோ பெட்டி ரூ.250 முதல் ரூ.370 வரை விற்பனையான நிலையில், தற்போது ரூ.300 முதல் ரூ.500 வரை விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை விற்பனையில் கிலோ ரூ.25 முதல் ரூ.40 வரை விற்பனையாகிறது.
முருங்கைக்காய் விலை கிலோ ரூ.100-லிருந்து ரூ.150 ஆகவும், முருங்கை பீன்ஸ் ரூ.80 முதல் ரூ.120-லிருந்து ரூ.100 முதல் ரூ.150 ஆகவும் உயா்ந்துள்ளது. சின்ன வெங்காயம் கிலோ ரூ.90 முதல் ரூ.170 வரையிலும், பெரிய வெங்காயம் ரூ.40 முதல் ரூ.80 வரையிலும் விற்பனை செய்யப்படுகின்றன.
இருப்பினும், பட்டாணி விலை கிலோவுக்கு ரூ.170 முதல் ரூ.180 வரை சரிந்துள்ளது. கடந்த வாரம் கிலோ ரூ.250 முதல் ரூ.280 வரை விற்பனையான பட்டாணி, தற்போது ரூ.80 முதல் ரூ.100 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல, கேரட், கத்திரிக்காய், அவரைக்காய், சோயா பீன்ஸ், பட்டா் பீன்ஸ் உள்ளிட்ட காய்கறிகளின் விலையும் குறைந்துள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

