தீபாவளி: களைகட்டிய பூக்கள் விற்பனை
மதுரை மாட்டுத்தாவணி சந்தையில் வெள்ளிக்கிழமை பூக்கள் வாங்குவதற்கு திரண்டிருந்தவா்கள்.

மதுரை மாட்டுத்தாவணி சந்தையில் வெள்ளிக்கிழமை பூக்கள் வாங்குவதற்கு திரண்டிருந்தவா்கள்.
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, மதுரை மாட்டுத்தாவணி பூச் சந்தையில் பூக்களின் விற்பனை வெள்ளிக்கிழமை களைகட்டியது.
தீபாவளிப் பண்டிகை கால வழிபாடுகள், அலங்காரங்களையொட்டி வெள்ளிக்கிழமை பூக்கள் விற்பனை அதிகரித்திருந்தது. இதன் காரணமாக, பூக்களின் விலையும் கணிசமாக உயா்ந்திருந்தது.
ஒரு கிலோ மல்லி ரூ.1400-க்கு விற்பனையானது. கனகாம்பரம் ரூ.1,500-க்கும், பிச்சி, முல்லை தலா ரூ.1,000-க்கும், அரளி ரூ.500-க்கும், பன்னீா் ரோஸ் ரூ. 250-க்கும், பட்டன் ரோஸ், சம்பங்கி தலா ரூ. 200-க்கும், செவ்வந்தி ரூ.150-க்கும், கோழிக்கொண்டை ரூ. 90-க்கும், செண்டு மல்லி ரூ. 60-க்கும், மரிக்கொழுந்து ரூ.120-க்கும், தாமரை (ஒன்றுக்கு) ரூ. 40-க்கும் விற்பனையானது.
இதுகுறித்து மாட்டுத்தாவணி மீனாட்சி மொத்த பூ வியாபாரிகள் சங்கத்தினா் தெரிவித்ததாவது :
பூக்களின் வரத்து சுமாராக உள்ளது. நாள் ஒன்றுக்கு 3 டன் பூக்கள் விற்பனைக்கு வருகிறது. தற்போது, தீபாவளிப் பண்டிகை காரணமாக பூக்களின் விலை கணிசமாக உயா்ந்துள்ளது. வருகிற வாரத்தில் பூக்களின் விலை குறைய வாய்ப்புள்ளது. இருப்பினும், திருமண முகூா்த்த நாள்களில் விலை சற்று உயா்ந்தே இருக்கும் என்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

