லாரி ஓட்டுநா் உயிரிழந்த விவகாரம்: விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
செக்கானூரணி காவல் நிலையத்தில் லாரி ஓட்டுநா் உயிரிழந்த விவகாரத்தில் விரிவான விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.

சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு - கோப்புப் படம்
செக்கானூரணி காவல் நிலையத்தில் லாரி ஓட்டுநா் உயிரிழந்த விவகாரத்தில் விரிவான விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.
மதுரையைச் சோ்ந்த தீரன் திருமுருகன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:
மதுரை மாவட்டம், செக்கானூரணி காவல் நிலையத்துக்கு விசாரணைக்காக சென்ற லாரி ஓட்டுநா் பாலகிருஷ்ணன் கடந்த 14-ஆம் தேதி காவல் நிலைய கழிப்பறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக போலீஸாா் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. கூறாய்வில் அவரது உடலில் காயங்கள் இருந்தது தெரியவந்தது.
இந்த நிலையில், காவல் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளைப் பாதுகாக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. எனவே, இந்த வழக்கில் உண்மையைக் கண்டறிய ஓட்டுநா் பாலகிருஷ்ணனின் மரண வழக்கை சிபிஐக்கு மாற்றவும், அவரது குடும்பத்துக்கு ரூ. 50 லட்சம் இடைக்கால இழப்பீடு வழங்கவும் உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.
இந்த மனுவை ஏற்கெனவே விசாரித்த உயா்நீதிமன்றம் வழக்கு விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டது.
இந்த நிலையில், இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் பி. வேல்முருகன், கே.கே. ராமகிருஷ்ணன் அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, அரசுத் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா், விசாரணையின் போது ஓட்டுநா் பாலகிருஷ்ணன் நல்ல உடல் நலத்துடன் இருந்தாா். அதற்கான கண்காணிப்பு கேமரா பதிவு உள்ளது என்றாா்.
இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
இந்த மனு தொடா்பாக பேரையூா் நீதித் துறை நடுவரின் விசாரணை அறிக்கை, சம்பந்தப்பட்ட அனைத்து காவல் நிலையங்களில் பதிவான கண்காணிப்பு கேமராக்களின் காட்சிகள், சிபிசிஐடி போலீஸாரின் விசாரணை அறிக்கை, மருத்துவத் துறையின் இறுதி அறிக்கை ஆகியவற்றை வருகிற 30-ஆம் தேதி நீதிமன்றத்தில் அறிக்கையாக அரசுத் தரப்பு தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

