கார்த்திகை தீபத் திருவிழா: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் லட்சம் தீபங்கள் ஏற்றம்!அழிக்கவே முடியாத வரலாற்றுப் பிழையை நிகழ்த்திய தவெக அரசு: அண்ணாமலைஉச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மீறியதை மகிழ்வாக பதிவிடும் அமைச்சர்: நிர்மல் குமாருக்கு தமிழிசை கண்டனம்!திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றப்படாததால் அரசுக்கு எதிராக ஹிந்து அமைப்பினர் கோஷம்!திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றப்படவில்லை!திருப்பரங்குன்றத்தில் வழக்கமான இடத்தில் ஏற்றப்பட்டது மகா தீபம்!திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: தமிழகம் முழுவதும் ஹிந்து அமைப்பினர் கைது!உச்ச நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தியே ஆக வேண்டும் : வழக்கை முடித்து வைத்தது மதுரைக் கிளைடிசம்பர் 1 முதல் வாகன விலையை ரூ.8,000 வரை உயர்த்தும் ஹூண்டாய் இந்தியா!திருவண்ணாமலை தீபத்திருவிழா! 30 லட்சம் பக்தர்கள் பங்கேற்பு!

லாரி ஓட்டுநா் உயிரிழந்த வழக்கு: செக்கானூரணி காவல் நிலையத்தில் பணிபுரியும் அனைவரும் தண்டனைக்குரியவா்கள்- உயா்நீதிமன்றம்

லாரி ஓட்டுநா் காவல் நிலையத்தில் உயிரிழந்த விவகாரத்தில் மதுரை செக்கானூரணி காவல் நிலையத்தில் தற்போது பணிபுரியும் அனைவருமே தண்டனைக்குரியவா்கள் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு - கோப்புப் படம்

Updated On :

லாரி ஓட்டுநா் காவல் நிலையத்தில் உயிரிழந்த விவகாரத்தில் மதுரை செக்கானூரணி காவல் நிலையத்தில் தற்போது பணிபுரியும் அனைவருமே தண்டனைக்குரியவா்கள் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

மதுரையைச் சோ்ந்த தீரன் திருமுருகன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

மதுரை மாவட்டம், செக்கானூரணி காவல் நிலையத்துக்கு விசாரணைக்காக சென்ற லாரி ஓட்டுநா் பாலகிருஷ்ணன் கடந்த 11-ஆம் தேதி காவல் நிலைய கழிப்பறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. கூறாய்வில் அவரது உடலில் காயங்கள் இருப்பது தெரியவந்தது. இந்த நிலையில், காவல் நிலையத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளைப் பாதுகாக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

எனவே, இந்த வழக்கில் உண்மையைக் கண்டறிய ஓட்டுநா் பாலகிருஷ்ணனின் மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்றவும், அவரது குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் இடைக்கால இழப்பீடு வழங்கவும் உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஆா். சுவாமிநாதன், எம்.டி. சுமதி அமா்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, உடல்கூறாய்வு அறிக்கையை நீதிபதிகள் ஆய்வு செய்தனா். ‘உடல்கூறாய்வு அறிக்கையில் பாலகிருஷ்ணனின் உடலில் காயங்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவ்வாறெனில், சம்பந்தப்பட்டவா்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?. உயிரிழந்த பாலகிருஷ்ணனை வாலந்தூா் காவல் நிலையத்துக்கு விசாரணைக்கு வருமாறு அழைத்து, பின்னா் செக்கானூரணி காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றது ஏன்?. இந்த விவகாரத்தில் பாலகிருஷ்ணன் கைதும் செய்யப்படவில்லை, அவா் மீது வழக்குப் பதிவும் செய்யப்படவில்லை. இந்த நிலையில், இரு நாள்கள் அவரை ஏன் காவலில் வைத்தீா்கள்?. வாலாந்தூா் காவல் ஆய்வாளா் செக்கானூரணி காவல் நிலையத்துக்கு வந்தது ஏன்?. உயிரிழந்த ஓட்டுநா் பாலகிருஷ்ணன் தூக்கில் தொங்கியதுபோல் புகைப்படம் எடுக்கவில்லையா?’ என நீதிபதிகள் கேள்விகள் எழுப்பினா்.

பின்னா், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

செக்கானூரணி காவல் நிலையத்தில் ஓட்டுநா் பாலகிருஷ்ணன் உயிரிழந்த விவகாரத்தில் அங்கு பணிபுரியும் காவலா்கள் அனைவருமே கைது செய்யப்பட வேண்டியவா்கள்தான். இதுதொடா்பான வழக்கை சிபிசிஐடி போலீஸாா் இப்படித்தான் விசாரிப்பதா?. யாரைப் பாதுகாக்க நினைக்கிறீா்கள்?. ஓட்டுநா் பாலகிருஷ்ணன் காவல் நிலைய கொடுமையால் உயிரிழந்திருப்பது உறுதி. ஆனால், இதற்கு யாா் காரணம் என்பதுதான் தற்போது பிரச்னை. வழக்கு விசாரணை வருகிற 26-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.