உங்களுக்குத் தேவை மசாலா! சந்திரபாபு நாயுடுவின் பேச்சுக்கு தவெக அளித்த பதில்!பிலிப்பின்ஸில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!புழல் சிறையில் அன்பில் மகேஸை மீண்டும் சந்தித்தார் உதயநிதி ஸ்டாலின்! தனி விமானத்தில் தில்லி புறப்பட்டார் முதல்வர் விஜய்!நடிகை த்ரிஷா திருமணம் எப்போது? பிரபல பெண் ஜோதிடர் வெளியிட்ட கணிப்பு!ஆதவ் அர்ஜுனாவை பிரிவதாக மனைவி டெய்சி மார்ட்டின் அறிவிப்பு!பாம்பன் பாலத்திலிருந்து கடலில் குதித்த பயணிகள்! ஒருவர் பலி!திமுக ஆட்சியில் பதியப்பட்ட வழக்குகள் ரத்து! 92,000 விவசாயிகள், ஆசிரியர்கள் விடுவிப்பு!அக்வான் புயல் எங்கே கரையைக் கடக்கும்? வெளியான அதிர்ச்சித் தகவல்!கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு ஐசிசி தலைவராக மீண்டும் ஜெய் ஷா தேர்வு!

ஓட்டுநர் பாலகிருஷ்ணன் உயிரிழப்பு: காவல் மரணம் என வழக்குப்பதிவு செய்த சிபிசிஐடி!

மதுரை செக்கானூரணி காவல் நிலையில் லாரி ஓட்டுநர் பாலகிருஷ்ணன் மரணமடைந்த விவகாரத்தில் சிபிசிஐடி வழக்குப்பதிவு...

Death of driver Balakrishnan: CB-CID registers case as a custodial death

லாரி ஓட்டுநர் பாலகிருஷ்ணன் - DIN

Updated On :

மதுரை செக்கானூரணி காவல் நிலையில் லாரி ஓட்டுநர் பாலகிருஷ்ணன் மரணமடைந்த விவகாரத்தில் சிபிசிஐடி போலீசார் 'காவல் மரணம்' என்று வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மதுரை அருகேயுள்ள செக்கானூரணி காவல் நிலையத்தில், ஏலக்காய் ஏற்றி வந்த தனது லாரி எரிந்துவிட்டதாக புகார் கொடுக்க வந்த லாரி ஓட்டுநர் பாலகிருஷ்ணன் சனிக்கிழமை அதிகாலை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. தனது கணவர் தற்கொலை செய்திருக்க வாய்ப்பில்லை, காப்பீடு பெறுவதற்கு குற்றத்தை ஒப்புக்கொள்ளச் சொல்லி அவரை துன்புறுத்தியிருக்கிறார்கள் என அவரது மனைவி கூறியிருந்தார்.

இந்த விவகாரத்தில் காவல் ஆய்வாளர் முத்து, தலைமைக் காவலர்கள் பழனிவேல்ராஜன், கலைச்செல்வி ஆகிய 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இந்தச் சம்பவம் குறித்து சிபிசிஐடி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வரும் நிலையில் மேற்குறிப்பிட்ட மூவருக்கும் சம்மன் அனுப்பியுள்ளனர்.

இதனிடையே பாலகிருஷ்ணன் பிரேத பரிசோதனை நடைபெற்ற நிலையில் அவரது உடலில் ரத்த காயங்கள், கழுத்து இறுக்கப்பட்டது, இதயம், மூளை, நுரையீரலில் வீக்கம் இருந்தது தெரிய வந்துள்ளது.

இதையடுத்து பாலகிருஷ்ணனின் உறவினர்கள் இன்று மதுரையில் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் காவல்துறையினர் அவர்களை கைது செய்துள்ளனர்.

இதனிடையே சிபிசிஐடி போலீசார், மதுரை செக்கானூரணி காவல் நிலையத்தில் பாலகிருஷ்ணன் மரணமடைந்ததால் இதனை 'காவல் மரணம்' என்று வழக்குப்பதிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதேபோல வழக்குப்பதிவில் வேறு யாருடைய பெயர்களும் சேர்க்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

Summary

Death of driver Balakrishnan: CB-CID registers case as a custodial death

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.