ஓட்டுநர் பாலகிருஷ்ணன் மரணம்: சாலை மறியலில் ஈடுபட்ட உறவினர்கள் கைது!
ஓட்டுநர் பாலகிருஷ்ணன் மரணம் தொடர்பாக சாலை மறியலில் ஈடுபட்ட உறவினர்கள் கைது!
சாலை மறியலில் ஈடுபட்ட பாலகிருஷ்ணனின் உறவினர்கள் - X
செக்கானூரணி காவல் நிலையத்தில் மரணமடைந்த ஓட்டுநர் பாலகிருஷ்ணனின் உறவினர்கள், மதுரை கோரிப்பாளையம் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்ட நிலையில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
மதுரை அருகேயுள்ள செக்கானூரணி காவல் நிலையத்தில் தனது லாரி எரிந்துவிட்டதாக புகார் கொடுக்க வந்த லாரி ஓட்டுநர் பாலகிருஷ்ணன் சனிக்கிழமை அதிகாலை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. ஓட்டுநர் தற்கொலை செய்திருக்க வாய்ப்பில்லை என்று அவரது மனைவி கூறியிருந்தார்.
இந்த விவகாரத்தில் காவல் ஆய்வாளர் முத்து, தலைமைக் காவலர்கள் பழனிவேல்ராஜன், கலைச்செல்வி ஆகிய 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
இந்தச் சம்பவம் குறித்து சிபிசிஐடி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வரும் நிலையில் மேற்குறிப்பிட்ட மூவருக்கும் சம்மன் அனுப்பியுள்ளனர்.
இதனிடையே பாலகிருஷ்ணன் பிரேத பரிசோதனை நடைபெற்ற நிலையில் அவரது உடலில் 5 ரத்த காயங்கள் இருந்தது தெரிய வந்துள்ளது.
கழுத்திலும் முதுகிலும் காயங்கள் இருந்ததாகவும் மூளையில் வீக்கமும் ரத்தக்கசிவு இருந்ததாகவும் இதயம், நுரையீரல்களில் வீக்கம் இருந்ததாகவும் பிரேத பரிசோதனை அறிக்கையில் உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரேத பரிசோதனை அறிக்கை வெளியான நிலையில் பாலகிருஷ்ணனின் உறவினர்கள் தொடர்ந்து 3 ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மதுரை கோரிப்பாளையம் பகுதியில் பாலகிருஷ்ணனின் தாயார், உறவினர்கள் உள்ளிட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தன் மகன் பாலகிருஷ்ணன் தற்கொலை செய்திருக்கமாட்டார், அவரை போலீசார் அடித்து துன்புறுத்தி கொலை செய்துள்ளதாக அவரது தாயார் கூறியுள்ளார்.
அப்போது பாலகிருஷ்ணனின்உறவினர்கள் - காவல்துறையினர் இடையே வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து பாலகிருஷ்ணனின் உறவினர்களை காவல்துறையினர் கைது செய்து அழைத்துச் சென்றனர்.
Summary
Death of driver Balakrishnan: Relatives arrested for staging a road blockade in madurai
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


