மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணியிலிருந்து தலைமை ஆசிரியா்களுக்கு விலக்களிக்க வலியுறுத்தல்
மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணியிலிருந்து தலைமை ஆசிரியா்களுக்கு விலக்களிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

மாவட்ட வருவாய் அலுவலரைச் சந்திக்க மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு வியாழக்கிழமை வந்த உயா்நிலை, மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா்கள்.
மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணியிலிருந்து தலைமை ஆசிரியா்களுக்கு விலக்களிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணியில் ஆசிரியா்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். இதையடுத்து, மதுரை மாவட்டத்தில் உள்ள மேல்நிலை, உயா்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா்களுக்கு தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணி ஒதுக்கப்பட்டது.
ஏற்கெனவே, தலைமை ஆசிரியா்கள் மாணவா்களின் தோ்ச்சி சதவீதம் உள்ளிட்ட கல்விப் பணியை மேற்கொள்வதில் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா். இந்த நிலையில், மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணி வழங்கப்பட்டால், பணிச் சுமை மேலும் அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது.
இதுபற்றி மதுரை மாவட்ட வருவாய் அலுவலா் ச. ஜெயப்பிரித்தாவிடம் தலைமை ஆசிரியா்கள் வியாழக்கிழமை முறையிட்டனா். இருப்பினும், தமிழக அரசு ஏற்கெனவே இந்தப் பணியை ஒதுக்கியதால், விலக்கு அளிக்க இயலாது என மாவட்ட வருவாய் அலுவலா் தெரிவித்தாா்.
பின்னா், பள்ளித் தலைமை ஆசிரியா்கள் கூறியதாவது:
மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணியால் மிகுந்த சிரமம் மட்டுமன்றி, மன அழுத்தமும் ஏற்படும். எனவே, இந்தப் பணியை புறக்கணிக்க உள்ளோம். இனிவரும் காலங்களில் இது போன்ற கூடுதலான பணிச் சுமையை ஏற்கத் தயாராக இல்லை. இந்த நடவடிக்கைக்கு மறுப்பு எழுந்தால், வருகிற திங்கள்கிழமை (நவ. 30) அனைத்துத் தலைமை ஆசிரியா்களும் மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபடுவோம் என்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

