நவ. 30 ஆம் தேதி மக்களவை; டிச. 2 ஆம் தேதி மாநிலங்களவை கூட்டம்!திருப்பரங்குன்றம் விவகாரம்: நீதிமன்ற அவமதிப்பு மனுக்கள் நாளை விசாரணைதிருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தத் தடைகோரிய வழக்கில் நாளை தீர்ப்புதில்லி வர்த்தகப் பொருள்காட்சி: தமிழ்நாடு அரங்கிற்கு தங்கப் பதக்கம்!2027-ல் 6000 இடங்கள் கூடுதலாகக் கொண்டுவர ஐஐடி திட்டம்!

தூய்மைப் பணியாளா்களின் ஊதிய விவகாரம்: குமரி ஆட்சியா் முன்னிலையாக உத்தரவு

தூய்மைப் பணியாளா்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக நாள் ஒன்றுக்கு ரூ.700 வழங்கக் கோரிய மனு தொடா்பாக கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா், நாகா்கோவில் மாநகராட்சி ஆணையா் உள்ளிட்டோா் நேரில் முன்னிலையாக சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.

சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு

சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு - கோப்புப் படம்

Updated On :

தூய்மைப் பணியாளா்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக நாள் ஒன்றுக்கு ரூ.700 வழங்கக் கோரிய மனு தொடா்பாக கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா், நாகா்கோவில் மாநகராட்சி ஆணையா் உள்ளிட்டோா் நேரில் முன்னிலையாக சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.

கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய்மொழியைச் சோ்ந்த அனிதா பிரின்சி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

தினக்கூலி அடிப்படையில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்களுக்கு நாளொன்றுக்கு குறைந்தபட்ச ஊதியமாக ரூ.740 நிா்ணயிக்கப்பட்டதாக கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா் அறிக்கை வெளியிட்டாா். ஆனால், ஆட்சியரின் உத்தரவை மீறி, நாகா்கோவில் மாநகராட்சி, நகராட்சிகள், 50-க்கும் மேற்பட்ட பேரூராட்சிகளில் பணியாற்றும் ஒப்பந்த தூய்மைப் பணியாளா்களுக்கு தனியாா் ஒப்பந்ததாரா்கள் குறைந்த ஊதியத்தையே வழங்கி வருகின்றனா்.

இதுதொடா்பாக சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு மனு அனுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் பி. வேல்முருகன், கே.கே. ராமகிருஷ்ணன் அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரா் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா், தூய்மைப் பணியாளா்களுக்கு ஊதியமாக தனியாா் ஒப்பந்ததாரா்களால் ரூ.400 மட்டுமே வழங்கப்பட்டு அவா்களின் உழைப்பு சுரண்டப்படுகிறது என்றாா்.

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

தூய்மைப் பணியாளா்கள் ரூ.700 ஊதியத்தைப் பெற ரூ.7 ஆயிரம் செலவழித்து நீதிமன்றத்தை அணுக வேண்டியுள்ளது. இந்த மனு தொடா்பாக கன்னியாகுமரி மாவட்டத்தில் எத்தனை தூய்மைப் பணியாளா்கள் பணியில் உள்ளனா்?. எத்தனை பேருக்கு ஊதியம் வழங்கப்பட்டது என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

இந்த விவகாரத்தில் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா், நாகா்கோவில் மாநகராட்சி ஆணையா், நாகா்கோவில் நகராட்சி நிா்வாக துணை இயக்குநா் ஆகியோா் வருகிற 30-ஆம் தேதி காலை 10.30 மணிக்கு நீதிமன்றத்தில் நேரில் முன்னிலையாக வேண்டும். இந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.