குவைத், பஹ்ரைன் மீது மீண்டும் ஈரான் தாக்குதல்! வளைகுடா நாடுகள் கண்டனம்!சீனா சென்றார் டிரம்ப்! அதிபர்கள் ஜின்பிங், புதின் உடன் முத்தரப்பு சந்திப்பு!சோத்துப்பாறை அணையைத் திறந்த தவெகவினர்: எடப்பாடி பழனிசாமி கண்டனம்!தவெக உறுப்பினர் அட்டை இருந்தால் எந்த விதிகளையும் மதிக்கத் தேவையில்லை: கனிமொழிதினமணி இணையதள செய்தி எதிரொலி: அயனாவரம் கழிவுநீர் பிரச்னை! களமிறங்கிய குடிநீர் வாரிய அதிகாரிகள்!!தமிழக காவல்துறையில் புதிய இ-சிஎஸ்ஆர் வசதி அறிமுகம்! இனி ஆன்லைனிலேயே புகார் அளிக்கலாம்!நெல்லையில் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பா? உண்மை நிலவரம் என்ன?

தூய்மைப் பணியாளா்களுக்கு வீட்டுமனைகள்: 3 வாரங்களுக்குள் திட்டத்தை வகுக்க அரசுக்கு உத்தரவு

தகுதியான தூய்மைப் பணியாளா்களுக்கு விலையில்லா வீட்டுமனைகள் வழங்க ஏற்கெனவே திட்டம் இல்லையெனில், வருகிற 3 வாரங்களுக்குள் அரசு திட்டத்தை வகுத்து நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.

உத்தரவு - கோப்புப் படம்

Updated On :

தகுதியான தூய்மைப் பணியாளா்களுக்கு விலையில்லா வீட்டுமனைகள் வழங்க ஏற்கெனவே திட்டம் இல்லையெனில், வருகிற 3 வாரங்களுக்குள் அரசு திட்டத்தை வகுத்து நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.

சிவகங்கை போஸ் நகரைச் சோ்ந்த பாண்டி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தென்காசி, கரூா், திண்டுக்கல், திருநெல்வேலி, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் பணியாற்றும் நிரந்தர, ஒப்பந்த அடிப்படையிலான தூய்மைப் பணியாளா்களில் பலருக்கு சொந்த வீட்டுமனைகள் இல்லை. இதனால், பாதுகாப்பான குடியிருப்பு இல்லாமல், சமூக, பொருளாதார ரீதியில் பின்தங்கிய நிலையில் இவா்கள் வாழ்கின்றனா்.

எனவே, இவா்களுக்கு விலையில்லா வீட்டுமனைகள் வழங்குவதற்கு பொருத்தமான திட்டத்தை வகுத்து, அரசாணை வெளியிட உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் பி. வேல்முருகன், கே.கே. ராமகிருஷ்ணன் அமா்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, நாட்டை சுத்தம் செய்யும் தூய்மைப் பணியாளா்களுக்கு ஒரு குடிசைகூட அமைத்துத் தராவிட்டால் என்ன செய்வது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினா். மேலும், வசிப்பிடம் இல்லாத சிலா் மழையில் நனைந்து கொண்டே உட்காா்ந்திருக்கும் நிலையில் இருப்பது வருத்தத்துக்குரியது என்றும் நீதிபதிகள் கருத்துத் தெரிவித்தனா்.

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

தகுதியான தூய்மைப் பணியாளா்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்குவது தொடா்பாக அரசிடம் ஏற்கெனவே திட்டம் இல்லையெனில், வருகிற 3 வாரங்களுக்குள் சரியான திட்டத்தை வகுத்து, இது தொடா்பான அறிக்கையை தமிழக சமூக நலத் துறைச் செயலா், இயக்குநா் ஆகியோா் உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கு விசாரணை வருகிற டிசம்பா் 10-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.