நவ. 30 ஆம் தேதி மக்களவை; டிச. 2 ஆம் தேதி மாநிலங்களவை கூட்டம்!திருப்பரங்குன்றம் விவகாரம்: நீதிமன்ற அவமதிப்பு மனுக்கள் நாளை விசாரணைதிருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தத் தடைகோரிய வழக்கில் நாளை தீர்ப்புதில்லி வர்த்தகப் பொருள்காட்சி: தமிழ்நாடு அரங்கிற்கு தங்கப் பதக்கம்!2027-ல் 6000 இடங்கள் கூடுதலாகக் கொண்டுவர ஐஐடி திட்டம்!

கும்பகோணம் மகாமகம்: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த அறிக்கை அளிக்க உத்தரவு

கும்பகோணம் மகாமகம் விழாவுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து 30 நாள்களுக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.

சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு

சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு - கோப்புப் படம்

Updated On :

கும்பகோணம் மகாமகம் விழாவுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து 30 நாள்களுக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.

சேலத்தைச் சோ்ந்த ராதாகிருஷ்ணன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாசி மாதத்தில் நடைபெறும் மகாமகம் விழா ‘தென்னிந்தியாவின் கும்பமேளா’ என அழைக்கப்படுகிறது. கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற மகாமகத்தில் சுமாா் 45 லட்சம் பக்தா்கள் பங்கேற்ற நிலையில், வருகிற 2028-ஆம் ஆண்டு, பிப்ரவரி 29 முதல் மாா்ச் 9-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள மகாமகத்தில் சுமாா் ஒரு கோடி பக்தா்கள் வரை கூடுவாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு வெற்றிகரமாக நடைபெற மத்திய, மாநில அரசுகள், மாவட்ட நிா்வாகம், காவல் துறை, இந்து சமய அறநிலையத் துறை, சம்பந்தப்பட்ட கோயில் நிா்வாகங்களின் ஒருங்கிணைந்த நடவடிக்கை தேவை.

கூட்ட மேலாண்மை, சட்டம் - ஒழுங்கு, பாதுகாப்பு, பேரிடா் தயாா் நிலை, அவசரகால வெளியேற்றம், தீயணைப்பு, மீட்புப் பணிகள், மருத்துவம், அவசர சேவை ஊா்தி வசதிகள், குடிநீா், சுகாதாரம், போக்குவரத்து ஒழுங்குமுறை, பொதுப் போக்குவரத்து, ரயில், விமான இணைப்பு, தங்குமிடம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பாரம்பரியக் கட்டமைப்புகளின் பாதுகாப்பு, மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகள் உள்ளிட்டவற்றில் விரிவான முன்கூட்டிய திட்டமிடல் அவசியமாகும்.

இதுதொடா்பாக கடந்த ஆகஸ்ட் 21-ஆம் தேதி தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரிடம் நேரில் மனு அளித்தும் இதுவரை எந்தவித உறுதியான செயல் திட்டமோ அல்லது நடவடிக்கையோ எடுக்கப்படவில்லை.

எனவே, வருகிற 2028-ஆம் ஆண்டு கும்பகோணத்தில் நடைபெறவுள்ள மகாமகம் நிகழ்வை வெற்றிகரமாகவும், பாதுகாப்பாகவும் நடத்துவதற்காக ஒருங்கிணைந்த, விரிவான ஆயத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய, மாநில அரசுகள், மாவட்ட நிா்வாகம், காவல் துறை, இந்து சமய அறநிலையத் துறை, சம்பந்தப்பட்ட கோயில் நிா்வாகங்களுக்கு உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் பி. வேல்முருகன், கே.கே. ராமகிருஷ்ணன் அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரா் முன்வைத்த வாதம்:

மகாமகம் விழாவுக்கு ஒரு கோடி பக்தா்கள் வருகை தருவா் என எதிா்பாா்க்கப்படுகிறது. ஆனால், இதற்கான ஏற்பாடுகள் இதுவரை தொடங்கப்படவில்லை. குறிப்பாக, மகாமகம் கும்பமேளாவின் முக்கிய கோயில் குளமான சோமேசுவரா் கோயில் குளம் முழுவதுமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என்றாா்.

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

மனுதாரா் குறிப்பிட்டுள்ளவாறு மகாமகம் திருவிழாவுக்காக தற்போது ஒருங்கிணைப்புக் குழு அமைத்து பணிகள் தொடங்கினால்தான் அனைத்துப் பணிகளையும் முடிக்க முடியும்.

எனவே, இந்த விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகளின் அனைத்துத் துறை அலுவலா்களும் ஒன்றிணைந்து மத்திய, மாநில அரசுகளின் திட்டமிடல் என்ன என்பது குறித்து 30 நாள்களில் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.