வனப் பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள்: மத்திய, மாநில அதிகாரிகள் பதிலளிக்க உத்தரவு
தமிழகத்தில் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதிகள், சோதனைச் சாவடிகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் (சிசிடிவி) முறையாகச் செயல்படுவதை உறுதி செய்யக் கோரிய மனு தொடா்பாக மத்திய, மாநில வனத் துறையின் முதன்மைச் செயலா்கள் உள்ளிட்டோா் பதில் மனு தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.

சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு - கோப்புப் படம்
தமிழகத்தில் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதிகள், சோதனைச் சாவடிகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் (சிசிடிவி) முறையாகச் செயல்படுவதை உறுதி செய்யக் கோரிய மனு தொடா்பாக மத்திய, மாநில வனத் துறையின் முதன்மைச் செயலா்கள் உள்ளிட்டோா் பதில் மனு தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.
மதுரையைச் சோ்ந்த புஷ்பவனம் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:
தேசிய வன விலங்கு செயல் திட்டப் பரிந்துரைகளின்படி தமிழகத்திலுள்ள அனைத்து வன சோதனைச் சாவடிகள், வனச் சரக அலுவலகங்கள், வனத் துறை விருந்தினா் இல்லங்கள், தங்கும் விடுதிகள், மலையேற்றப் பயணிகளுக்கான ஓய்வுக் கூடங்கள், வேட்டைத் தடுப்புக் கூடங்கள், யானைகளை அடைத்து வைக்கும் கொட்டில்கள், மரக்கட்டை சேமிப்புக் கிடங்குகளில் இரவிலும் தெளிவாகக் கண்காணிக்கக் கூடிய நவீன கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும்.
மேலும், தமிழகத்தில் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதிகள், வன சோதனைச் சாவடிகளில் இதுவரை பொருத்தப்பட்டுள்ள அனைத்து கண்காணிப்பு கேமராக்களும் முறையாக செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும். இந்த கேமராக்களில் பதிவாகும் காட்சிகளை 18 மாதங்களுக்கு சேமித்து வைக்கப்படுவதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.
இந்த மனு உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. தா்மாதிகாரி, நீதிபதி பி. வேல்முருகன் அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
இந்த மனு தொடா்பாக மத்திய, மாநில வனத் துறையின் முதன்மைச் செயலா்கள், தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத் தலைவா், முதன்மை தலைமை வனப் பாதுகாவலா் ஆகியோா் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கு விசாரணை வருகிற 26-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

