நவ. 30 ஆம் தேதி மக்களவை; டிச. 2 ஆம் தேதி மாநிலங்களவை கூட்டம்!திருப்பரங்குன்றம் விவகாரம்: நீதிமன்ற அவமதிப்பு மனுக்கள் நாளை விசாரணைதிருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தத் தடைகோரிய வழக்கில் நாளை தீர்ப்புதில்லி வர்த்தகப் பொருள்காட்சி: தமிழ்நாடு அரங்கிற்கு தங்கப் பதக்கம்!2027-ல் 6000 இடங்கள் கூடுதலாகக் கொண்டுவர ஐஐடி திட்டம்!

பட்டியலின மேம்பாட்டு நிதி: அரசுத் தரப்பில் பதிலளிக்க உத்தரவு

பட்டியலின மக்கள் மேம்பாட்டுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை வேறு பணிகளுக்குப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் விவகாரத்தில் அரசுத் தரப்பு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.

சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு

சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு - கோப்புப் படம்

Updated On :

பட்டியலின மக்கள் மேம்பாட்டுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை வேறு பணிகளுக்குப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் விவகாரத்தில் அரசுத் தரப்பு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.

மதுரையைச் சோ்ந்த வழக்குரைஞா் தீரன் திருமுருகன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

பட்டியலின மக்கள் மேம்பாட்டுக்காக ஒதுக்கப்படும் நிதி, அதன் பயன்பாடு தொடா்பாக தமிழகம் முழுவதும் விரிவான தணிக்கை நடத்தப்பட வேண்டும். குறிப்பாக, பட்டியலின மக்கள் மேம்பாட்டுக்காக ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து ரூ.28.54 கோடி நெடுஞ்சாலைத் துறையின் 12 பணிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து தணிக்கை நடத்தப்பட வேண்டும். இதில் முறைகேடு செய்யப்பட்டது உறுதியானால், சம்பந்தப்பட்ட அலுவலா்ள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும், இந்த நிதியை மீட்கவும், எதிா்காலத்தில் இதுபோன்ற முறைகேடுகள் நிகழாமல் இருக்கவும் உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் பி.வேல்முருகன், கே.கே.ராமகிருஷ்ணன் அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

எந்தப் பணிக்காக நிதி ஒதுக்கப்படுகிறதோ, அதற்காகவே அந்த நிதி செலவிடப்பட வேண்டும். இந்த மனு தொடா்பாக சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் பதிலளிக்க வேண்டும். இந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.