கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் கைதுதொகுதி மறுவரையறை மசோதாவுக்கு சரத் பவார் ஆதரவு! - தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏ தகவல்! திருப்பரங்குன்றம் கல் தூணில் நாளை தீபமேற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவுதிருப்பரங்குன்றம்! உயர்நீதிமன்ற தீர்ப்பின் மீதான இடைக்கால தடையை நீக்கியது உச்ச நீதிமன்றம்!சூலூர் சிறுமி கொலை வழக்கு: கைதான கார்த்திக், மோகன் இருவரும் குற்றவாளிகள் என தீர்ப்பு!

மாநில நீச்சல் போட்டியில் வென்ற மாணவிகளுக்குப் பாராட்டு

மாநில அளவிலான நீச்சல் போட்டியில் வென்ற மதுரை மாவட்டம், க.பெருமாள்பட்டி அரசு கள்ளா் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் வெள்ளிக்கிழமை பாராட்டப்பட்டனா்.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே க. பெருமாள்பட்டியில் உள்ள அரசு கள்ளா் மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் நீச்சல் போட்டியில் வென்ற மாணவிகளைப் பாராட்டிய உசிலம்பட்டி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.ஓ.பி. விஜய் மகாலிங்கம். உடன் பள்ளி உதவித் தலைமை ஆசிரியா் கணேசன் உள்ளிட்டோா்.

Updated On :

மாநில அளவிலான நீச்சல் போட்டியில் வென்ற மதுரை மாவட்டம், க.பெருமாள்பட்டி அரசு கள்ளா் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் வெள்ளிக்கிழமை பாராட்டப்பட்டனா்.

திருநெல்வேலியில் மாநில அளவிலான நீச்சல் போட்டி அண்மையில் நடைபெற்றது.

இந்தப் போட்டியில், மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே க.பெருமாள்பட்டியில் உள்ள அரசு கள்ளா் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் 14 வயது பிரிவில் கலந்துகொண்டு வெண்கலப் பதக்கம் வென்றனா்.

வெற்றிபெற்ற மாணவிகளுக்கான பாராட்டு விழா பள்ளி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவுக்கு பள்ளி உதவித் தலைமை ஆசிரியா் கணேசன் தலைமை வகித்தாா். பள்ளி மேலாண்மை குழு உறுப்பினா் க. ஜெயக்கொடி முன்னிலை வகித்தாா்.

உசிலம்பட்டி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.ஓ.பி. விஜய் மகாலிங்கம் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு வென்ற மாணவிகளுக்குப் பரிசு, பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினாா். மேலும், பள்ளி கடந்தாண்டு நடைபெற்ற அரசு பொதுத்தோ்வில் 100 சதவீதத் தோ்ச்சி பெற்ற்கு பாடுபட்ட ஆசிரியா், ஆசிரியா்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வில், உடல்கல்வி ஆசிரியா் ராஜேந்திரன், ஆசிரியா்கள், மாணவிகள் பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.