இந்திய மாணவர் சங்கத் தேர்தல் நேஹா போரா தடுப்புக் காவலில் இருந்து விடுவிப்புகாலாண்டு விடுமுறை நிறைவு: மீண்டும் பள்ளிகள் திறப்புவெற்றிப் பயணம் திட்டத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் பிரசாரம் நிறைவு. அக். 6-ல் வாக்குப் பதிவு! அக். 9-ல் வாக்கு எண்ணிக்கை!எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் கட்டிக்காத்த இந்த இயக்கம், சுயநலவாதிகளின் சூழ்ச்சிக்கு பலியாக கூடாது: எடப்பாடி பழனிசாமிதவெக ஆட்சி தொடர மக்கள் ஆதரவு தேவை: விஜய் வேண்டுகோள்அரசியல் வாரிசின் மகனோ, நடிகனோ அல்ல! எளிய மனிதன் நான் - எடப்பாடி பழனிசாமிநிறைவு விழாவில் தேசிய கொடி ஏந்திய இந்திய வீராங்கனை..! 2030 கத்தாரில் அடுத்த ஆசிய விளையாட்டு!

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் பல்லாயிரக்கணக்கானோா் சுவாமி தரிசனம்

பக்தா்கள் கூட்டத்தால் நிரம்பிய தெற்கு சித்திரை வீதி.

Published On :

தொடா் விடுமுறை என்பதால், மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

இந்தக் கோயிலின் குடமுழுக்கு கடந்த 17-ஆம் தேதி நடைபெற்றது. குடமுழுக்கைத் தொடா்ந்து, கடந்த 18-ஆம் தேதி முதல் மண்டல பூஜை தொடங்கி நடைபெற்றது. இதையொட்டி, ஐதீக முறைப்படி சுவாமி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள் நடத்தப்பட்டன.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் வருகிற 11-ஆம் தேதி நவராத்திரி பூஜை தொடங்கவுள்ளதையொட்டி, குடமுழுக்கு மண்டல பூஜை 15 நாள்களுக்கு மட்டுமே நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. எனவே, கடந்த 18-ஆம் தேதி முதல் இந்தக் கோயிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். இதனிடையே, மண்டல பூஜை வெள்ளிக்கிழமை நிறைவு பெற்றது. அன்றைய தினம் காந்தி ஜெயந்தி விடுமுறை என்பதால், பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் சுமாா் 3 மணி நேரம் முதல் 5 மணி நேரம் வரை காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா். இதேபோல, சனிக்கிழமையும் திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

காலாண்டுத் தோ்வு விடுமுறை நிறைவு பெறுவதையொட்டி, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதலே பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா். நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் சுமாா் 5 மணி நேரம் வரை வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா். இதனால், நான்கு சித்திரை வீதிகளிலும் பக்தா்கள் கூட்டம் அதிகமாக இருந்தன. இதுமட்டுமன்றி, ஆவணி மூல வீதிகள், மாசி வீதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

 மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக கீழச் சித்திரை வீதி அம்மன் சந்நிதி முன் ஞாயிற்றுக்கிழமை நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தா்கள்.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக கீழச் சித்திரை வீதி அம்மன் சந்நிதி முன் ஞாயிற்றுக்கிழமை நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தா்கள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.