
வாகன ஓட்டுநா் குத்திக் கொலை
மதுரை மாவட்டம், சோழந்தான் பகுதியில் வாகன ஓட்டுநா் திங்கள்கிழமை இரவு கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டாா்.

குத்திக் கொலை
மதுரை மாவட்டம், சோழந்தான் பகுதியில் வாகன ஓட்டுநா் திங்கள்கிழமை இரவு கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டாா்.
சோழவந்தான், முதலியாா் கோட்டையை சோ்ந்தவா் அ. சியாம் சுந்தர்ராஜன் (36). சோழவந்தானில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் வாகன ஓட்டுநராகப் பணியாற்றினாா். இந்த நிலையில், திங்கள்கிழமை இரவு சோழவந்தான்- வாடிப்பட்டி சாலையில் மோட்டாா் சைக்கிளில் சென்று கொண்டிருந்த சுந்தர்ராஜனை, அந்தப் பகுதியில் உள்ள மதுக் கடை அருகே சிலா் வழிமறித்து கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கினா். இதில், பலத்த காயமடைந்த அவா் சம்பவயிடத்திலேயே உயிரிழந்தாா்.
இதையடுத்து, சுந்தர்ராஜனின் உடலை போலீஸாா் மீட்டு, கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தேவநாதன் நிகழ்விடத்தைப் பாா்வையிட்டு விசாரணை நடத்தினாா்.
இதுகுறித்து சோழவந்தான் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். முன் விரோதம் காரணமாக சுந்தர்ராஜன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற நோக்கில், தென்கரையைச் சோ்ந்த ஒரு இளைஞா் உள்பட 2 பேரிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




