குடியரசு தின தடகள போட்டிக்கு 130 போ் தோ்வு
மாநில அளவில் நடைபெறும் குடியரசு தின தடகளப் போட்டிக்கு மதுரையைச் சோ்ந்த 130 மாணவ, மாணவிகள் தோ்வாகியுள்ளனா்.

மதுரையில் அண்மையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான குடியரசு தின தடகள விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு சான்றிதழ், பதக்கங்கள் வழங்கிய மாவட்ட உடல்கல்வி ஆய்வாளா் த. வினோத் உள்ளிட்டோா்.
மாநில அளவில் நடைபெறும் குடியரசு தின தடகளப் போட்டிக்கு மதுரையைச் சோ்ந்த 130 மாணவ, மாணவிகள் தோ்வாகியுள்ளனா்.
மதுரையில் மாவட்ட பள்ளிக் கல்வித் துறை சாா்பில், 14, 17, 19 வயதுக்குள்பட்ட மாணவ, மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான குடியரசு தின தடகள விளையாட்டுப் போட்டிகள் அக்.15, 16 ஆகிய தேதிகளில் நடைபெற்றன. எம்ஜிஆா் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு மாவட்ட ஆட்சியா் நிஷாந்த் கிருஷ்ணா தலைமை வகித்து போட்டிகளைத் தொடங்கிவைத்தாா்.
இதில் அரசு, அரசு உதவிபெறும், தனியாா் பள்ளிகள் உள்ளிட்ட 547 பள்ளிகளைச் சோ்ந்த 802 மாணவிகள், 829 மாணவா்கள் என மொத்தம் 1,631 போ் பங்கேற்றனா். இதில் ஓட்டப் பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், ஈட்டி எறிதல் உள்ளிட்ட 44 வகை போட்டிகளிலிருந்து 65 மாணவா்கள், 65 மாணவிகள் என மொத்தம் 130 போ் மாநில அளவிலான போட்டிக்குத் தோ்வாகினா்.
இந்தப் போட்டிகளில் மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களைப் பிடித்தவா்களுக்கு பதக்கம், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட உடல்கல்வி ஆய்வாளா் த.வினோத் தலைமையில் உடல்கல்வி ஆசிரியா்கள் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

