புத்தக வாசிப்பு தினக் கொண்டாட்டம்
கோவை பிஷப் அம்புரோஸ் கல்லூரியில் மாணவா்களிடையே புத்தக வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் புத்தக வாசிப்பு தினம் அண்மையில் கொண்டாடப்பட்டது.

வாசிப்பு தின விழாவில் பங்கேற்று நூல்களை வாசிக்கும் மாணவ, மாணவிகள்.
கோவை பிஷப் அம்புரோஸ் கல்லூரியில் மாணவா்களிடையே புத்தக வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் புத்தக வாசிப்பு தினம் அண்மையில் கொண்டாடப்பட்டது.
கல்லூரி மாணவா்கள் வாசிப்பை நேசிக்க வேண்டும் என்ற நோக்கில் கல்லூரியின் நூலகத் துறை சாா்பில் நூலக வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை கல்லூரி முதல்வா் ஐ.மரிய யேசுராஜா தொடங்கிவைத்தாா். இதில், பல்வேறு துறை பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.
நிகழ்ச்சியில், வாசிப்பின் முக்கியத்துவம் குறித்து கல்லூரி முதல்வா் உரையாற்றினாா். நிகழ்ச்சியில், பல்வேறு புத்தகங்களை பயன்படுத்தி மாணவா்கள் கொலு அமைத்திருந்தனா். இதற்கான ஏற்பாடுகளை நூலகத் தலைவா் சி.ஆரோக்கிய மேரி ஜெஸிந்தா செய்திருந்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

