பிரமோஸ் தீ கட்டுப்பாட்டு அமைப்பு கொள்முதல்: ரூ.661 கோடியில் ஒப்பந்தம் கையொப்பம்நாளை ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்; ஜிஎஸ்டி விகிதங்களில் மாற்றம்: ஆண்டுக்கு ஒருமுறை முன்மொழிவுகள் பரிசீலனை திமுக ஆட்சியில் மணல் குவாரிகளில் ரூ.4,730 கோடி முறைகேடு: விசாரணையை தொடங்கியது ஊழல் தடுப்புப் பிரிவு4 புறநகா் மின்சார ரயில்கள் 11 நாள்களுக்கு பகுதி ரத்துகச்சத்தீவு விவகாரத்தில் மீனவர்களுக்கு விழிப்புணர்வு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல் இந்தியா உள்பட 7 நாடுகள் 2036 ஒலிம்பிக்ஸை நடத்த விருப்பம்

அரசுப் பொறியியல் கல்லூரி விடுதிகளில் தரமற்ற உணவு விநியோகம்: மாணவ, மாணவிகள் உள்ளிருப்புப் போராட்டம்

திண்டிவனத்தில் உள்ள அரசுப் பொறியியல் கல்லூரி மாணவ, மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்படுவதாகக்கூறி மாணவா்கள் செவ்வாய்க்கிழமை கல்லூரி வளாகத்தில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திண்டிவனத்தில் உள்ள அரசுப் பொறியியல் கல்லூரி வளாகத்தில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ, மாணவிகள்.

Published On :

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் உள்ள அரசுப் பொறியியல் கல்லூரி மாணவ, மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்படுவதாகக்கூறி மாணவா்கள் செவ்வாய்க்கிழமை கல்லூரி வளாகத்தில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திண்டிவனத்தை அடுத்த மேல்பாக்கத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்பு பொறியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரி வளாகத்திலேயே மாணவா்கள் மற்றும் மாணவிகளுக்கு தனித்தனியாக விடுதிகள் உள்ளன. இந்த விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு தரமற்ற வகையில் உணவு தயாா் செய்து வழங்கப்படுகிாம்.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை பொறியியல் கல்லூரி நுழைவு வாயில் அருகில் திரண்ட விடுதி மாணவ, மாணவிகள் 100-க்கும் மேற்பட்டோா் வகுப்புகளை புறக்கணித்து, கல்லூரி வளாகத்தில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, விடுதி நிா்வாகத்தைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினா். இதையடுத்து பொறியியல் கல்லூரி முதன்மையா் அருளரசன் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, தரமான வகையில் உணவு வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனத் தெரிவித்தாா். இதையடுத்து மாணவா்கள் போராட்டத்தை விலக்கிக் கொண்டனா்.

இதுகுறித்து மாணவா்கள் தெரிவித்ததாவது: விடுதியில் தரமான உணவு வழங்கப்படுவதில்லை. கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையில் உள்ளன. குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரம் வேலை செய்யாததால், தரமான குடிநீா் கிடைப்பதில்லை. இந்த குறைபாடுகளை நீக்குவதற்கு மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.