உண்டு உறைவிடப்பள்ளியில் தரமற்ற உணவு: கல்வராயன் மலையில் மாணவா்கள் சாலை மறியல்
உண்டு உறைவிடப்பள்ளியில் தரமற்ற உணவு வழங்கப்படுவதாக கூறி கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை அருகிலுள்ள இன்னாடு அரசு மலைவாழ் உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் அங்குள்ள பேருந்து நிறுத்தம் அருகே வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

கல்வராயன்மலை அருகேயுள்ள இன்னாடு கிராமத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட மாணவ, மாணவிகள்.
உண்டு உறைவிடப்பள்ளியில் தரமற்ற உணவு வழங்கப்படுவதாக கூறி கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை அருகிலுள்ள இன்னாடு அரசு மலைவாழ் உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் அங்குள்ள பேருந்து நிறுத்தம் அருகே வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
இன்னாடு, தேக்குமரத்துவளவு, கித்துவளவு, தரிசுக்காடு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சோ்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வரும் இப்பள்ளியில் 350 போ் விடுதியில் தங்கியுள்ளனா்.
இந்நிலையில், பள்ளி விடுதியில் தரமற்ற உணவுகள் வழங்கவேண்டும். விடுதியில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும். பள்ளிக்கு ஆசிரியா்கள் சரிவர வருவது இல்லை எனக் கூறி வெள்ளிமலை-சேராப்பட்டு சாலையில் இன்னாடு பேருந்து நிறுத்தம் அருகே பள்ளி மாணவ, மாணவிகள் சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா்.
இதுகுறித்து தகவலறிந்த கரியாலூா் போலீசாா் நிகழ்விடம் சென்று மறியலில் ஈடுபட்டிருந்த பள்ளி மாணவ, மாணவிகளிடம் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். அப்போது பழங்குடியினா் நலத் துறை அதிகாரிகள் நேரில் வந்து விடுதிகளை ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என மாணவ, மாணவிகள் தெரிவித்தனா். போலீஸாா் உறுதி அளித்ததின் பேரில், சாலைமறியல் போராட்டத்தை கைவிட்டு மாணவா்கள் கலைந்து சென்றனா். இதனால் அப் பகுதியில் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

