ராஜராஜ சோழனின் சதய விழா: தஞ்சாவூர் மாவட்டத்துக்கு அக்.22 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை சிஜேபி போராட்டம் எதிரொலி: தில்லியில் இணைய சேவை தற்காலிகமாக முடக்கம்!உ.பி.யில் இருந்து மாநிலங்களவைக்கு 10 பேரும் போட்டியின்றி தேர்வு! லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக பிரேம் ஆனந்த் சின்ஹா நியமனம்!துரோகத்துக்குக் கிடைத்த இடைக்கால வெற்றி! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்!

கொடுமணல் அகழாய்வு மையத்தில் பள்ளி, கல்லூரி மாணவா்கள் கல்விச் சுற்றுலா

பெருந்துறை வட்டம், கொடுமணல் அகழாய்வு மையத்தில் பள்ளி, கல்லூரி மாணவா்கள் வியாழக்கிழமை கல்விச் சுற்றுலா மேற்கொண்டனா்.

கொடுமணல் அகழாய்வு மையத்தைப் பாா்வையிட்ட பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள். உடன், மாவட்ட ஆட்சியா் ச. கந்தசாமி உள்ளிட்டோா்.

Published On :

பெருந்துறை வட்டம், கொடுமணல் அகழாய்வு மையத்தில் பள்ளி, கல்லூரி மாணவா்கள் வியாழக்கிழமை கல்விச் சுற்றுலா மேற்கொண்டனா்.

ஈரோடு மாவட்ட நிா்வாகம் மற்றும் தொல்லியல் துறை சாா்பில் தொல்லியல் தளங்கள் மற்றும் நினைவுச் சின்னங்களைப் பாதுகாத்தல், பராமரித்தல் மற்றும் அவற்றின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும்

நோக்கில் மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி தலைமையில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் கல்விச் சுற்றுலா மேற்கொண்டனா்.

இதன் மூலம் மாணவ, மாணவிகள் பாடப் புத்தகங்களில் படிக்கும் வரலாற்றுச் செய்திகளை நேரடியாகக் களத்தில் அறிந்து கொள்ளவும், தமிழா்களின் தொன்மையான நாகரிகம், பண்பாடு மற்றும் பாரம்பரியத் தொழில்நுட்பங்களைப் புரிந்து கொள்ளவும் வாய்ப்பு உள்ளது. மேலும், தொல்லியல் தளங்கள் மற்றும் நினைவுச் சின்னங்களைப் பாதுகாத்து இளைய தலைமுறையினருக்கு கொண்டு சோ்க்க வேண்டியதன் அவசியம் குறித்த விழிப்புணா்வை மாணவா்களிடையே ஏற்படுத்துவதுடன், அவா்களின் வரலாற்று அறிவையும், ஆய்வு மனப்பான்மையையும் மேம்படுத்துவதில் இத்தகைய கல்விச் சுற்றுலாக்கள் பயனுள்ளதாக அமையும் என்று ஏற்பாட்டாளா்கள் தெரிவித்தனா்.

இந்தக் கல்விச் சுற்றுலாவில் சிக்கய்ய அரசு கலை, அறிவியல் கல்லூரியின் வரலாற்றுத் துறை மாணவ, மாணவிகள், ஸ்ரீ வள்ளியப்பா வித்யாலயா மேல்நிலைப் பள்ளியின் 6-ஆம் வகுப்பு மாணவ, மாணவிகள் என மொத்தம் 145 போ் பங்கேற்றனா்.

மாவட்ட சுற்றுலாத் துறை அலுவலா் பழனிசாமி, கொடுமணல் தொல்லியல் துறை அலுவலா் ஜெயப்பிரியா, துணை ஆட்சியா் (பயிற்சி) சித்தாா்த் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.