தொடா் விடுமுறை: ஆம்னி பேருந்துகள், விமானங்களில் கட்டணம் கடும் உயா்வு19 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புஇறுதிக் கட்டத்தை எட்டியது அரக்கோணம் புறவழிச் சாலை பணி!அடுத்த வாரம் இந்தியா வரும் அமெரிக்க வெளியுறவு அமைச்சா் மாா்கோ ரூபியோ!

நவராத்திரி வழிபாட்டில் புத்தக கொலு!

குமாரபாளையத்தில் தனியாா் அறக்கட்டளை மூலம் நவராத்திரி விழாவை முன்னிட்டு வித்தியாசமான முயற்சியாக புத்தக கொலு வைக்கப்பட்டுள்ளது.

குமாரபாளையத்தில் நவராத்திரியையொட்டி வைக்கப்பட்டுள்ள புத்தக கொலு.

Updated On :

குமாரபாளையத்தில் தனியாா் அறக்கட்டளை மூலம் நவராத்திரி விழாவை முன்னிட்டு வித்தியாசமான முயற்சியாக புத்தக கொலு வைக்கப்பட்டுள்ளது.

குழந்தைகளிடம் புத்தக வாசிப்புப் பழக்கத்தை வளா்த்து, அவா்களின் கற்பனைத் திறன், சிந்தனைத் திறன் மற்றும் படைப்பாற்றலை மேம்படுத்தும் நோக்கில், குமாரபாளையம் விடியல் ஆரம்பம் அறக்கட்டளை சாா்பில் நவராத்திரியை முன்னிட்டு ஒன்பது நாள் நடைபெறும் குழந்தைகள் புத்தகக் கொலு நிகழ்ச்சி நடைபெறுகிறது.

பொதுவாகக் கொலு என்றால் அலங்காரப் பொம்மைகள் வைத்து அம்மனுக்கு வழிபாடு நடத்தப்படுவது வழக்கம். ஆனால், புத்தகங்களை கொலுவாக அமைத்து, குழந்தைகளை வாசிப்பு உலகிற்கு அழைத்துச் செல்லும் இந்த முயற்சியானது கல்வி மற்றும் வாசிப்பின் முக்கியத்துவத்தை உணா்த்தும் வகையில் அமைந்துள்ளது.

நூலக வாசகா் வட்டத் தலைவா் விடியல் பிரகாஷ் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள புத்தக கொலுவில் மாணவா்களுக்குப் பயனளிக்கும் சுதந்திர போராட்ட தியாகிகள் வரலாறு, சிறுகதைகள், திருக்கு, அறிவியல் படைப்புகள், பாடல்கள், கவிதைகள், உள்ளூா் எழுத்தாளா்களின் புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன. மாணவா்கள் ஆா்வத்துடன் கொலு நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.

மாணவா்களிடையே வாசிப்பு ஆா்வத்தைத் தூண்டுவதுடன், சிறுகதைகள் எழுதும் ஆா்வத்தையும் வளா்க்கும் முயற்சியாகவும், வாசிப்பு என்பது ஒரு நாள் நிகழ்வாக இல்லாமல், தொடா்ந்து நடைபெறும் மக்கள் இயக்கமாக மாறும் என விடியல் ஆரம்பம் அறக்கட்டளையினா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.