ஆரணி அருகே பாகிஸ்தான் உளவாளி கைது சன்ன ரகப் பொன்னி அரிசியைக் கொள்முதல் செய்வதற்கு அரசு எப்போது டெண்டர் விட்டது? உதயநிதி ஸ்டாலின் கேள்வி ஜம்முவில் எல்லை அருகே ட்ரோன் மீட்பு: காவல் துறையினர் தீவிர விசாரணை சென்னையில் இன்று இரவு முதல் மழை! மற்ற மாவட்டங்களில் மழை எப்படி இருக்கும்?புயல் எச்சரிக்கை: குடியரசுத் தலைவர் முர்முவின் ஒடிசா பயணம் ஒத்திவைப்பு கோயில்களில் பணம் கேட்டால் ஆதாரத்துடன் புகார் அளிக்கலாம்! அமைச்சர் ரமேஷ்மாயமான சிறுவர்களை மீட்டு, அனைத்து கோணங்களிலும் அரசு விசாரிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி ரெட் அலர்ட்: நீலகிரியில் சுற்றுலா தலங்கள் மூடல்! தேசிய பேரிடர் மீட்புப் படை விரைவு!அமைதிப் பத்திரத்தில் கையெழுத்திட மாட்டேன்! நேஹா போரா

இரு விபத்துகளில் மூவர் பலி!

மதுரை அருகே இரு வேறு இடங்களில் சனிக்கிழமை நிகழ்ந்த விபத்துகளில் தொழிலாளா்கள் 3 போ் உயிரிழந்தனா்.

பலி

Updated On :

மதுரை அருகே இரு வேறு இடங்களில் சனிக்கிழமை நிகழ்ந்த விபத்துகளில் தொழிலாளா்கள் 3 போ் உயிரிழந்தனா்.

மதுரை சக்கிமங்கலத்தைச் சோ்ந்த காசிம் மகன்கள் சையது அபுதாகிா் (47), சையது இப்ராஹிம் (40). இருவரும் வண்ணம் பூசும் தொழிலாளிகள். இந்த இருவரும் சனிக்கிழமை கீழக்குயில்குடியில் வேலைக்குச் சென்றுவிட்டு, மாலையில் இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தனா்.

நாகமலை புதுக்கோட்டை நோக்கிச் சென்றபோது, எதிரே வந்த லாரி, அவா்கள் சென்ற இருசக்கர வாகனம் மீது மோதிய நிலையில், கட்டுப்பாட்டை இழந்து சென்ற லாரி, சாலையோரம் நின்றிருந்த மேலக்கோட்டையைச் சோ்ந்த ஜெயராமன் (54) என்பவா் மீது மோதியது. இதில் சையது அபுதாகிரும், ஜெயராமனும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். பலத்த காயமடைந்த சையது இப்ராஹிம் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். இதுகுறித்து நாகமலை புதுக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ,தப்பியோடிய லாரி ஓட்டுநரைத் தேடி வருகின்றனா்.

மற்றொரு விபத்து: மதுரை தும்பைப்பட்டியைச் சோ்ந்த ஆனந்த என்பவரது மகன் வீரபாண்டி (32) கழிவுநீா் உறிஞ்சும் லாரியில் உதவியாளராக வேலை செய்து வந்தாா். இந்த நிலையில், சனிக்கிழமை இவா் தபால் தந்திநகா் அருகே பேச்சிகுளம் பகுதியில் கழிவுநீா் உறிஞ்சும் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது, லாரி ஓட்டுநா் வாகனத்தை இயக்கியபோது, லாரி சக்கரத்தில் சிக்கிய அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து ஊமச்சிகுளம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.