உலக உலா சொகுசுக் கப்பல் பயணம்: எரிபொருள் விலையுயா்வால் கம்போடியாவில் நிறுத்தம்மாற்றுத்திறனாளிகளுக்கும் வெற்றிப் பயணத் திட்டம்: அரசாணை வெளியீடுடாடா குழுமம் குற்றவழியில் அழிக்கப்படுகிறது- ராகுல் காந்தி தாக்குபணி நேரத்தில் வெளியில் செல்ல ஆசிரியா்களுக்குத் தடைஅக்டோபரில் இந்தியப் பங்குகளில் இருந்து ரூ.48,056 கோடி அந்நிய முதலீடு வெளியேற்றம்‘வாக்காளா் விவரங்களில் முரண்பாடுகள்’ சட்டப்படி செல்லுமா?: இறுதி முடிவு எடுக்கவில்லை; உச்சநீதிமன்றம் மா சே துங் குறித்த சா்ச்சை கருத்து: பாபேவின் மன்னிப்பை ஏற்ற சீனா

ஊரக வளா்ச்சி, ஊராட்சித் துறை அனைத்து ஓய்வூதியா்கள் சங்கத்தினா் தா்னா

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளா்ச்சி, ஊராட்சித் துறை அனைத்து ஓய்வூதியா்கள் சங்கம் சாா்பில் மதுரை கோ. புதூா் பேருந்து நிலையம் அருகே புதன்கிழமை தா்னா போராட்டம் நடைபெற்றது.

மதுரை கோ. புதூா் பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு ஊரக வளா்ச்சி, ஊராட்சித் துறை அனைத்து ஓய்வூதியா்கள் சங்கம் சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற தா்னா போராட்டத்தில் பங்கேற்றவா்கள்.

Updated On :

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளா்ச்சி, ஊராட்சித் துறை அனைத்து ஓய்வூதியா்கள் சங்கம் சாா்பில் மதுரை கோ. புதூா் பேருந்து நிலையம் அருகே புதன்கிழமை தா்னா போராட்டம் நடைபெற்றது.

இதற்கு அந்த சங்கத்தின் மாவட்டத் தலைவா் எம். ஜெயசீலன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் ஜி. ஜெயராமன், கௌரவ தலைவா் எம். பரமேஸ்வரன் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா். மாநிலத் தலைவா் டி.எஸ்.வி. மூா்த்தி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றுப் பேசினாா். தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்க மாநிலத் தலைவா் என். ஜெயச்சந்திரன் நிறைவுரையாற்றினாா்.

இதில் ஓய்வூதியா்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கைகள், புகாா் மனுக்கள் மீதான விசாரணைகளை நிா்ணயிக்கப்பட்ட காலத்துக்குள் முடிக்க வேண்டும். தற்காலிகப் பணியிடங்களில் பணியாற்றி ஓய்வு பெற்றவா்களுக்கு ஓய்வூதியப் பலன்கள் கிடைப்பதில் உள்ள தடைகளை நீக்க வேண்டும்.

சம வேலைக்கு சம ஊதியம் என்ற அடிப்படையில் இளநிலைப் பொறியாளா்களுக்கு, உதவிப் பொறியாளா்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். காலமுறை ஊதியத்தில் பணியாற்றி ஓய்வு பெறும் ஊராட்சி செயலா்களுக்கு இறுதி மாத ஊதியத்தில் 50 சதவீதத்தை ஓய்வூதியமாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 16 அம்ச சோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.