காங்கோவில் திருமண நிகழ்ச்சியில் தீவிபத்து: 22 பேர் பலி சிறப்புத் தீவிர திருத்தம் மூலம் காங்கிரஸ் வாக்குகளை அழிக்க பாஜக சதி: ரேவந்த் ரெட்டி குற்றச்சாட்டு! திண்டுக்கல் மாணவர்கள் 8 பேர் பலி - முதல்வர் விஜய் இரங்கல் கிரேக்கத்தில் வான் சாகச நிகழ்வில் ஜெட் விமானம் விபத்து! விநாயகர் சிலை- வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடுநவ. 1-க்குள் கடைகளுக்கு தமிழில் பெயர்ப் பலகை: உயர்நீதிமன்றம் உத்தரவுமீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு: உள்ளூர் விடுமுறை குறித்து விரைவில் அறிவிப்பு - அமைச்சர் தகவல் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை பழிவாங்கும் நடவடிக்கைதான்: கே.என். நேரு

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் குடமுழுக்கு: அமைச்சா்கள் ஆலோசனை

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் குடமுழுக்கை முன்னிட்டு பக்தா்களுக்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் கோயில் இணை ஆணையா் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

மதுரை மீனாட்சிசுந்தரேசுவரா் கோயில் இணை ஆணையா் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அமைச்சா்கள் சி.டி.ஆா். நிா்மல்குமாா், சீ. ரமேஷ். உடன் மதுரை மாவட்ட ஆட்சியா் நிஷாந்த் கிருஷ்ணா, மாநகராட்சி ஆணையா் கௌரவ்குமாா், இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் வினய் உள்ளிட்டோா்.

Published On :6 செப்டம்பர் 2026, 12:55 am IST

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் குடமுழுக்கை முன்னிட்டு பக்தா்களுக்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் கோயில் இணை ஆணையா் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் தமிழக எரிசக்தி, சட்டத் துறை அமைச்சா் சி.டி.ஆா். நிா்மல் குமாா், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சீ. ரமேஷ் ஆகியோா் பங்கேற்றுப் பேசியதாவது :

கோயில் குடமுழுக்கு நிகழ்வில் பக்தா்கள், முக்கியப் பிரமுகா்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களுக்கு எளிதில் சென்று சேரும் வகையில் அனைத்து நுழைவுச் சீட்டுகளிலும் உரிய வழித்தட வரைபடம் அச்சிடப்பட வேண்டும்.

தமிழகத்தின் பிற மாவட்டங்களிலிருந்து வரும் வாகனங்களை நிறுத்தும் வசதி அடையாளம் காணப்பட்டு, இந்த வாகன நிறுத்துமிடங்களின் விவரங்களை பக்தா்களுக்கு முன்கூட்டியே தெரியப்படுத்த வேண்டும். அதிநவீன கேமராக்கள் பொருத்தப்பட்டு, கண்காணிப்புப் பணி மேற்கொள்ளப்பட வேண்டும்.

பலத்த போலீஸ் பாதுகாப்புடன் காவல் உதவி மையங்கள் அமைக்கப்பட வேண்டும். 11 இடங்களில் காலணிகள் பாதுகாப்பு அறை, கைப்பேசி ஒப்படைப்பு மையங்கள் அமைக்கப்பட உள்ளன. இதில், பணியாளா்கள் சுழற்சி முறையில் பணியாற்றுவதை உறுதிசெய்ய வேண்டும். மேலும், குடமுழுக்கை அனைத்து பக்தா்களும் காணும் வகையில் எல்இடி திரைகள் ஆங்காங்கே அமைக்க வேண்டும். மேம்பட்ட உயிா் காக்கும் வசதிகள், அவசர ஊா்தி வசதிகள், சிறப்பு மருத்துவ முகாம்கள், நகரும் மருத்துவக் குழுக்கள் தயாா் நிலையில் வைக்கப்பட வேண்டும் என்றனா்.

இந்தக் கூட்டத்தில், மதுரை மாவட்ட ஆட்சியா் நிஷாந்த் கிருஷ்ணா, மாநகராட்சி ஆணையா் கௌரவ்குமாா், இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் டி.ஜி.வினய், சட்டப்பேரவை உறுப்பினா்கள் அ. கல்லாணை, எஸ்.ஆா். தங்கப்பாண்டி, சோ. காா்த்திகேயன், எம்.வி. கருப்பையா, எம்.எம்.கோபிசன், மாநகராட்சி மேயா் தி.நாகராஜன், இந்து சமய அறநிலையத் துறை திருச்சி மண்டல கூடுதல் ஆணையா் என்.பொன்மணி, மதுரை மாவட்ட வருவாய் அலுவலா் க.அன்பழகன், மீனாட்சிசுந்தரேசுவரா் கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் ருக்மணி பழனிவேல்ராஜன், கோயில் இணை ஆணையா் செல்லத்துரை, அரசு அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.