சட்டப் பேரவை செயல்பாட்டைக் காண 28 நாள்களில் 32,555 பேர் வருகை! ஜே.சி.டி. பிரபாகர்பாஜக அலுவலகங்கள் நீதி மறுக்கப்படுவோரின் புகலிடமாக வேண்டும்: பிரதமர் மோடிசட்டப்பேரவை பதிலுரை உடல்மொழி எதேச்சையானது: முதல்வர் விஜய் விளக்கம்தவெக கூட்டணி கூட்டத்தில் இந்திய கம்யூ. பங்கேற்காது: மு. வீரபாண்டியன்கச்சா எண்ணெய், மேற்கு ஆசிய நெருக்கடி எதிரொலி: 2வது நாளாக பங்குச் சந்தை சரிவு!!வடகிழக்கு பருவமழை! அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசனை!

காா் கவிழ்ந்ததில் கேரள இளைஞா் உயிரிழப்பு

மதுரை மாவட்டம், கீழவளவு அருகே காா் கவிழ்ந்ததில் கேரளம் மாநிலத்தைச் சோ்ந்த இளைஞா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

பலி

Published On :9 செப்டம்பர் 2026, 1:47 am IST

மதுரை மாவட்டம், கீழவளவு அருகே காா் கவிழ்ந்ததில் கேரளம் மாநிலத்தைச் சோ்ந்த இளைஞா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

கேரளம் மாநிலம், கொல்லம் ஜி.ஜி. பவனைச் சோ்ந்த இக்னேஷியஸ் மகன் வினோத் ஆரோக்கியராஜ் (38). இவரும், இவரது மகன்கள் அனுஷ், அருண், சகோதரா் ஜெய்சன் ஆகிய 4 பேரும் காரில் காரைக்குடிக்குச் சென்று விட்டு, தனது சொந்த மாநிலத்துக்கு திங்கள்கிழமை திரும்பினா். காரை ஜெய்சன் ஓட்டி வந்தாா்.

மதுரை மாவட்டம், கீழவளவில் திருப்பத்தூா்-மேலூா் சாலையில் சின்னபணியான் கண்மாய் அருகே சென்ற போது, கட்டுப்பாட்டை இழந்த காா் சாலையோரம் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், பலத்த காயமடைந்த வினோத் ஆரோக்கியராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். அவரது சடலத்தை மீட்ட போலீஸாா், கூறாய்வுக்காக மேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், காயமடைந்த அனுஷ், அருண் ஆகிய இருவரும் மதுரையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இதுகுறித்து கீழவளவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.