சட்டப் பேரவை செயல்பாட்டைக் காண 28 நாள்களில் 32,555 பேர் வருகை! ஜே.சி.டி. பிரபாகர்பாஜக அலுவலகங்கள் நீதி மறுக்கப்படுவோரின் புகலிடமாக வேண்டும்: பிரதமர் மோடிசட்டப்பேரவை பதிலுரை உடல்மொழி எதேச்சையானது: முதல்வர் விஜய் விளக்கம்தவெக கூட்டணி கூட்டத்தில் இந்திய கம்யூ. பங்கேற்காது: மு. வீரபாண்டியன்கச்சா எண்ணெய், மேற்கு ஆசிய நெருக்கடி எதிரொலி: 2வது நாளாக பங்குச் சந்தை சரிவு!!வடகிழக்கு பருவமழை! அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசனை!

டேக்வாண்டோ போட்டியில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு

டேக்வாண்டோ போட்டியில் வென்ற மதுரை அகாதெமி மாணவ, மாணவிகளை செவ்வாய்க்கிழமை பாராட்டினா்.

டேக்வாண்டோ போட்டியில் வென்ற மாணவ, மாணவிகளை செவ்வாய்க்கிழமை பாராட்டிய மதுரை டேக்வாண்டோ அகாதெமி தலைமைப் பயிற்சியாளா் நாராயணன். உடன் பயிற்சியாளா் சஞ்சீவ் உள்ளிட்டோா்.

Published On :9 செப்டம்பர் 2026, 1:52 am IST

டேக்வாண்டோ போட்டியில் வென்ற மதுரை அகாதெமி மாணவ, மாணவிகளை செவ்வாய்க்கிழமை பாராட்டினா்.

மதுரை ஓம் சாதனா சென்ட்ரல் பள்ளியில் செப். 5, 6 ஆகிய இரு நாள்கள் 5-ஆவது ஹீரோஸ் கப் டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த 700-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா். இதில், மதுரை டேக்வாண்டோ அகாதெமி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு 35 தங்கம் , 18 வெள்ளி, 12 வெண்கலப் பதக்கங்களை வென்று சப் ஜூனியா், கேடட் பிரிவில் சாம்பியன்ஷிப் கோப்பையை கைப்பற்றினா்.

இதையடுத்து, வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை அகாதெமியின் தலைமைப் பயிற்சியாளா் நாராயணன், பயிற்சியாளா்கள் சஞ்சீவ், நவீன் குமாா், பிலால் ,புவனேஸ்வரி, நரேன் ஆகியோா் செவ்வாய்க்கிழமை பாராட்டினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.