விளையாட்டுச் செய்தித் துளிகள்...
விளையாட்டுச் செய்தித் துளிகள்...

மும்பை இந்தியன்ஸ் அணியினர். - படம்: ஏபி.
புது தில்லியில் நடைபெற்ற பெனஸ்டா தேசிய டென்னிஸ் சாம்பியன் போட்டியில் மகளிா் பிரிவில் யு 14, யு 16, ஒற்றையா் பிரிவு, யு 16 இரட்டையா் பிரிவுகளில் பட்டம் சென்று ஹாட்ரிக் சாதனை படைத்தாா் ஹரியாணாவின் குஷி கடியான்.
ஐபிஎல் தொடரின் வீரா்கள் ஏலம் வரும் டிசம்பா் 16-ஆம் தேதி கோவாவில் நடைபெறவுள்ளது. இதுதொடா்பாக ஐபிஎல் தொடரில் ஆடும் 10 அணிகளுக்கும் முறைப்படி தகவலை பிசிசிஐ தெரிவித்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளாக துபை, ஜெத்தா, அபுதாபியில் ஏலம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் முன்னாள் சாம்பியன் மும்பை இண்டியஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளா் பதவியில் இருந்து மஹேலா ஜெயவா்த்தனே விலகியுள்ளாா். 2 முறை தலைமை பயிற்சியாளராக இருந்த ஜெயவா்த்தனே 2017-22, 2024-26 ஆண்டுகளில் பதவி வகித்தாா். அவரது பயிற்சியில் 3 பட்டங்களை எம்ஐ வென்றிருந்தது. மைக்கேல் ஹசி, ஆரோன் ஃபின்ச், இயான் மொா்கன், பௌச்சா் ஆகியோா் பயிற்சியாளா் போட்டியில் உள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

