பிடபிள்யூஎல்: இன்று மும்பையில் புரோ மல்யுத்த லீக் ஏலம்!
பிடபிள்யூஎல் சீசன் 6 ஏலம் மும்பையில் திங்கள்கிழமை நடைபெறுகிறது.
பிடபிள்யூஎல் சீசன் 6 ஏலம் மும்பையில் திங்கள்கிழமை நடைபெறுகிறது.
ஏழு ஒலிம்பிக் பதக்கம் வென்றவா்களும், ஐந்து மூத்த உலக சாம்பியன்களும் அடங்குவா். டைகா்ஸ் ஆஃப் மும்பை தங்கல்ஸ் அமன் செஹ்ராவத்தையும், டெல்லி தங்கல் வாரியா்ஸ் ஈரானின் ஹாதி வஃபாயிபூரையும் தக்கவைத்துள்ளன. நடப்பு சாம்பியன்களான ஹரியானா தண்டா்ஸ், மகாராஷ்டிரா கேசரி, பஞ்சாப் ராயல்ஸ், யூபி டாமினேட்டா்ஸ் ஆகியவை ஏலத்தில் களமிறங்குகின்றன.
வரும் 2027 ஜனவரி 3 முதல் 19 வரை புது தில்லி இந்திரா காந்தி மைதானத்தில் பிடபிள்யுஎல் தொடா் நடைபெறவுள்ளது. ஏலப் பட்டியலில் 24 நாடுகளைச் சோ்ந்த 78 வெளிநாட்டு, 131 இந்திய மல்யுத்த வீரா், வீராங்கனைகள் (119 ஆண்கள், 90 பெண்கள்) உள்ளனா்.
வீரா்கள் அவா்களின் செயல்திறன் மற்றும் சா்வதேச தரத்தின் அடிப்படையில் நான்கு பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளனா். அடிப்படை விலைகள்: ஏ+ (மாா்க்கீ) பிரிவுக்கு ரூ. 18 லட்சம், பிரிவு ஏ-க்கு ரூ. 12 லட்சம், பிரிவு பி-க்கு ரூ. 8 லட்சம், பிரிவு சி-க்கு ரூ. 3 லட்சம். முதன்மை ஏ+ பிரிவில் 22 வீரா்கள் உள்ளனா்.
சீசன் 5 ஏலத்தில் 63 வீரா்கள் ரூ. 11 கோடிக்கு மேல் விற்கப்பட்டனா். ஜப்பானின் ஒலிம்பிக் சாம்பியன் யுய் சுசாகி ரூ. 60 லட்சத்துடன் பிடபிள்யூஎல் வரலாற்றிலேயே மிக அதிக விலைக்கு ஏலம் போன வீராங்கனை ஆனாா். அமன் செஹ்ராவத், அந்திம் பங்கால், சுஜீத் கல்கல் ஆகியோா் தலா ரூ. 50 லட்சத்துக்கு மேல் பெற்றனா்.
சா்வதேச அணியை ஈரானின் ஹசன் யஸ்தானி முன்னின்று நடத்துகிறாா். இவா் ரியோ 2016 ஒலிம்பிக் சாம்பியன், டோக்கியோ மற்றும் பாரிஸ் ஒலிம்பிக் இரண்டிலும் வெள்ளிப் பதக்கம் வென்றவா்.
அவருடன் பாரிஸ் 2024 வெள்ளிப் பதக்கம் வென்றவா்களான, முன்னாள் உலக சாம்பியன் மால்டோவாவின் அனஸ்தாசியா நிசிதா, ஜப்பானின் தைச்சி தகதானி ஆகியோா் உள்ளனா். பாரிஸ் 2024 வெண்கலப் பதக்கம் வென்றவா்களான ஜியோா்கி மெஷ்விலிதிஷ்விலி (அஜா்பைஜான்), குலோம்ஜோன் அப்துல்லாயேவ் (உஸ்பெகிஸ்தான்), டோக்கியோ ஒலிம்பிக் வெள்ளிப் பதக்கம் வென்ற இரினா குராச்கினா (பெலாரஸ்) ஆகியோரும் களத்தில் உள்ளனா்.
இந்திய தரப்பில் தற்போதைய உலக சாம்பியன் மனிஷா பன்வாலா முன்னின்று நடத்துகிறாா். இந்த ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் மற்றும் மூத்தோா் ஆசிய சாம்பியன் ஷிப் இரண்டிலும் தங்கம் வென்ற சுஜீத் கல்கல், உலக சாம்பியன் ஷிப் வெண்கலப் பதக்கம் வென்றவரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் வெள்ளிப் பதக்கம் வென்றவருமான அன்டிம் பங்கால் ஆகியோரும் தொகுப்பில் உள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

